தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் போட்டியின்றி தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் போட்டியின்றி தேர்வு

தாம்பரம், மார்ச் 5 தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி, துணை மேயராக ஜி.காமராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 70 வட்டங்களில் 54 வட்டங்களை தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட் டணி 9 வட்டங்களிலும், சுயேச் சைகள் 7 வட்டங்களிலும் வெற்றி பெற்றனர்.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக வசந்த குமாரி கமலக்கண்ணன் தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்பட்டார். 25 வயதான வசந்தகுமாரி, பி.டெக் வேதியியல் பொறியாளர்  ஆவார்.

போட்டியின்றி தேர்வு

தாம்பரம் மாநகராட்சி அலுவ லகத்தில் நேற்று (4.3.2022) மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் வசந்தகுமாரி போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்) ஆகியோர் முன்னி லையில் தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக வசந்தகுமாரி பதவி ஏற்றார்.

அவருக்கு மாநகராட்சி ஆணை யர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் மேயருக் கான உடை, செங்கோலை வழங்கி, மேயர் இருக்கையில் அமர வைத்தார்.

தரம் உயர்த்தப்படும்

பதவியேற்ற பிறகு மேயர் வசந்தகுமாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, தாம்பரம் மாநக ராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் அனைத்தும் நிச்சயமாக செய்து தரப்படும். தாம் பரம் மாநகராட்சியை சென்னைக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.

 துணை மேயர் ஜி.காமராஜ்

அதேபோல மதியம் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. துணை மேயர் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஜி.காமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யா ததால் ஜி.காமராஜ், தாம்பரம் மாநக ராட்சியின் முதல் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு மேயர் வசந்த குமாரி, ஆணையர் இளங்கோவன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஒரு சில சுயேச்சை கவுன்சிலர்களும் தேர்தலில் பங் கேற்கவில்லை.

No comments:

Post a Comment