தஞ்சாவூர், ஏப்.28 தஞ்சை அருகே நேற்று நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே விபத்தில் பலியான வர்களின் குடும்பத்திற்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறுவ தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி வழியாக களிமேடு கிராமத்திற்கு வந்தார்.
அங்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பலியான ஒவ்வொரு வரின் வீட்டிற்கும் சென்று, பலியானவர் களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பலியா னோரின் குடும்பத்தினருக்கு சட்டப் பேரவையில் அறிவித்தபடி ரூ.5 லட்சத் திற்கான நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் தீவிபத்தில் எரிந்து சேதம் அடைந்த தேரை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் தனியாக தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வை யிட்டு ஆறுதல் கூறினார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், தி.மு.க. சார்பில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்

No comments:
Post a Comment