அருமைப் பெரியோர்களே, மூத்த குடிமக்களே, நண்பர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

அருமைப் பெரியோர்களே, மூத்த குடிமக்களே, நண்பர்களே!

கரோனா கொடுந்தொற்று மீண்டும் லேசாக தமிழ்நாட்டில் தலை நீட்டுகிறது. யாரும் பீதி அடையத் தேவையில்லை. நமது தமிழ்நாடு அரசும், முதல மைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அரசின் அதிகாரிகளும் கூடுதல் முன்னெச் சரிக்கையுடனும், கவனத்துடனும் தடுப்பு முயற்சிகளில் மும்முரமாக முன் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் மிக மிக முக்கியம்!

இன்று (28.4.2022) காலை 10.30 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி பொது (அரசு) மருத்துவ மனையில் உள்ள தடுப்பூசி மய்யத்தில் பூஸ்டர் (Booster) ஊசியைப் போட்டுக் கொண்டேன். தொடர்ந்து நேரே 'விடுதலை' அலுவலகம் சென்று, எனது வழக்கமான பணிகளில்  ஈடுபட்டுள்ளேன்.

தயவு செய்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டிக் கொள்கிறேன்.

இது அரசுக்காக அல்ல - நமக்காக - நம் நலத்திற்காக!

அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் இயங்குகிறது. சென்றவுடன் சில மணித் துளிகளில் தடுப்பூசிப் போட்டுக்கொண்டு திரும்பலாம். எவ்வித இடையூறும் இல்லை - காலதாமதமும் ஏற்படாது.

இந்த வசதியை அவசியம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை  

28.4.2022

No comments:

Post a Comment