மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள செயற்கை உபகரணங்கள்: மாநகராட்சி ஆணையர் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள செயற்கை உபகரணங்கள்: மாநகராட்சி ஆணையர் வழங்கினார்

சென்னை, ஏப். 12-- மாற்றுத் திறனாளி கள் யாருடைய உதவியும் இல்லா மல் தானே சுயமாக செயல்படும் விதமாக அவர் களுக்கு உதவிடும் வகையில் சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில் ஆதிநாத் பிறந்த நாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை அண்மையில் நடத்தியது. இதில் 12 லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் 500 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங் கப்பட்டன.

இந்த முகாமில் சிறப்பு விருந் தினராக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டு மாற்றுத் திறனா ளிகளுக்கு செயற்கைக் கால்கள், ஊன்றுகோல்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள் மற்றும் நடைப் பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

இது குறித்து பிரவீன்ஜி டாட் டியா கூறுகையில், “மாற்றுத் திற னாளிகளுக்கு தன்னம்பிக்கையை  ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக் கோளுடன், எங்கள் டிரஸ்ட் கடந்த 42 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவி களையும் வழங்கி வருவதோடு அவ் வப்போது மருத்துவப் பரிசோ தனை முகாம்களையும், உபகரணங் கள் வழங்கும் முகாம்களையும் நடத்தி வருகிறது. 

இதுவரை, டாக்டர் மோகன் மனோஜ் ஜெயின் வழி காட்டுதலின் கீழ், 13 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் பயன் அடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment