பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரள வேண்டும் மல்லிகார்ஜூன கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரள வேண்டும் மல்லிகார்ஜூன கார்கே

புதுடில்லி,ஏப்.12- பாஜகவின் அடக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, எதிர்க்கட்சிகள் ஓரணி யாகத் திரள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்கள வை எதிர்க்கட்சித் தலை வருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டில்லியில் செய்தியா ளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறுகையில், ‘‘பண வீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினை களை மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின் றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உரு வாக்கப்பட்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் மயமாகி வருகின்றன.

பாஜகவின் அடக்கு முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் மக்கள் நலனை உறுதிப் படுத்தவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் மக்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், மாநிலத்தில் இருந்து பாஜகவை வெளி யேற்றுவதற்கும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் செயல்பட வேண்டும்.

அந்த மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடை பெற்றபோது, பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரசுடன் இணைய வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சியைக் கேட்டுக் கொண்டோம். 

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயா வதியே தலைவராக இருக் கலாம் என்றும் தெரிவித் தோம். 

ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியிடமிருந்து இது தொடர்பாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment