பெரியார் பன்னாட்ட மைப் பில் பங்காற்றுபவரும், அமெரிக்கத் திமுகவின் ஒருங்கிணைப்பாளரும், வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான வாசிங்டன் சிவா அவர்களின் தந்தை யார் மு.பரமசிவம் அவர்கள் நேற்று திங்கள்கிழமை, ஏப்ரல் 11, 2022 காலை 11 மணி அளவில் இயற்கை எய்தினார்.
பரப்புரைப் பெரும் பயணத்தில் திண்டிவனத்தில் கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இச் செய்தியை அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக தோழர் வாசிங்டன் சிவா அவர்களைத் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 12, 2022) மாலை 4 மணி அளவில் மயிலாடுதுறையில் இறுதி நிகழ்வு நடைபெறும்.

No comments:
Post a Comment