சென்னை, ஏப்.3 நடப்பு ஆண்டில் கரோனா தொற்று காரணமாக தேர் வுகள் சற்று தள்ளிப்போய் இருக்கிறது.
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (2021-_2022) நேரடி வகுப்புகள் தற்போது நடந்து வரு கின்றன. வழக்கமாக மார்ச் மாதத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கும். அதனைத் தொடர்ந்து பிற வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.
நடப்பு ஆண்டில் கரோனா தொற்றுக் காரணமாக தேர்வுகள் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. அதன்படி, 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5ஆம்தேதி தொடங்கி 28ஆம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம்தேதி ஆரம்பித்து 31ஆம்தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30ஆம்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.இதுதவிர 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம்தேதி முதல் 13ஆம்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வி யாண்டுக்கான (2022_20-23) வகுப் புகள் ஜூன் மாதம் 13ஆம்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ஆம்தேதி முதல் வகுப்புகள் தொடங் கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment