மோடி அரசு 7 ஆண்டுகளாக மக்களை ‘ஏப்ரல் பூல்’ ஆக்கிக் கொண்டிருக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

மோடி அரசு 7 ஆண்டுகளாக மக்களை ‘ஏப்ரல் பூல்’ ஆக்கிக் கொண்டிருக்கிறது!

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விளாசல்

மும்பை, ஏப்.3- “வங்கிக் கணக்குகளில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும், கறுப் புப் பணம் மீட்கப்படும் என்பன போன்ற பாஜகவின் தேர்தல் வாக் குறுதிகள் அனைத்தும் முட்டாள்கள் தின நகைச்சுவையே!” என்று சிவ சேனா மூத்தத் தலைவரும், மாநிலங் களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் இது தொடர் பாக அவர் கூறியிருப்பதாவது:

பாஜகவின் தேர்தல் வாக்கு றுதிகளானஅச்சே தின், ஒவ் வொரு குடிமகனின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், கறுப் புப் பணம் மீட்கப்படும், இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது, இந்தியா வுடன் இணைக்கப்படும்போன் றவை முட்டாள்கள் தின (ஏப்ரல் 1) நகைச்சுவைகளே ஆகும். மக்களுக் கான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பொய் சொல்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பழி வாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என பாஜக கூறி வருவ தும்ஏப்ரல் பூல்நகைச்சுவை தான். கடந்த சில ஆண்டுகளா கவே இதுதான் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.  பெட்ரோல் - டீசல் விலை  உயர்வுகள் மூலம் ஆட் சியா ளர்கள் எப்போதுமே சாமானிய மனிதனை முட்டாளாக்கப் பார்க் சின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்கள் முட்டாள்கள் ஆக்கப் படுகின்றனர்" இவ்வாறு சஞ்சய் ராவத் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment