நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் ஏறத்தாழ தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், தொழிற்சாலை நடவடிக்கைகளும் கரோனாவுக்கு முந்தைய கால அளவுக்கு உற்ப்த்தியை அதிகரித்துள்ளன. இதானால், ஏற்றுமதி, இறக்குமதியும் இயல்பான அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. இந்த நிலையில், மார்ச் மாத வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூலில் இது புதிய உச்சம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் கூறு கையில், மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்
ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 095 ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 25,830 ஆகும், எஸ்.ஜி.எஸ்.டி ரூ.32,378 ஆகவும் ஐ.ஜி.எஸ்.டி ரூ.74,470- ஆகும். செஸ் வரி மூலம் ரூ.9,414 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவீதம் கூடுதாலக கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 8 அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு
2 வாரம் சிறைத் தண்டனை
அமராவதி, ஏப்.3- ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் கிராம, வார்டு செயல கங்களை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு 2020-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அய்ஏஎஸ் அதிகாரிகள் எம்.எம்.நாயக், விஜயகுமார், கோபாலகிருஷ்ண திரிவேதி, கிரிஜா சங்கர், ராஜசேகர், சின வீர பத்ருடு, சியா மளராவ், சிறீலட்சுமி ஆகிய 8 பேர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கில், இந்த 8 அய்ஏஎஸ் அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக உயர்நீதிமன்றம் கருதியது. இதனால் 8 அதிகாரி களுக்கும் 2 வாரச் சிறை தண்டனையும், அபராத மும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனால் பதறிப்போன அய்ஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக தங்கள் தவறுக்கு மன்னிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் வேண்டினர். இதனால், மனமிரங்கிய நீதிமன்றம், சிறைத் தண்டனையை ரத்து செய்தது. மாறாக சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளுக்குச் சென்று, மாதத்திற்கு ஒருமுறை அங்குள்ள மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 3 வேளை உணவுக்கான செலவையும் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:
Post a Comment