13 எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கை - ஒரு பலமான எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

13 எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கை - ஒரு பலமான எச்சரிக்கை!

கவிஞர் கலி.பூங்குன்றன்

நாட்டில் மதம் சார்ந்த வன்முறை சம்ப வங்கள் நிகழும்போது, அவற்றுக்கு எதி ராகப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு கேள்வி எழுப் பியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மாண்புமிகு மு..ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட் டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா, ஆர்.எஸ்.பி. பொதுச் செயலர் மனோஜ் பட்டாச்சார்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட் டோர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உணவு, உடை, நம்பிக்கை, பண்டி கைகள், மொழி ஆகியவற்றைப் பயன் படுத்தி ஆளும் கட்சியானது மக்களைத் தவறாகத் தூண்டிவிட்டு வருகிறது. நாட் டில் மதவெறியைத் தூண்டி, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருபவர்க ளுக்கு எதிராகப் பேசாமல் பிரதமர் மோடி அமைதிகாப்பது ஆச்சரியமளிக்கிறது. பிரதமரின் இச்செயல், சமூகத்தில் பிரிவி னையைப் பரப்பும் குழுக்களுக்கு அதி காரப்பூர்வமாக அனுமதி அளிக்கும் வகை யில் உள்ளது.

சமூக நல்லிணக்கமே நாட்டின் பன் முகத்தன்மையைப் பல ஆண்டுகளாகக் காத்து வந்தது. அதை வலுப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதி கொண்டுள்ளன. சமூக நல்லிணக்கத்தைக் காப்பதற்கு எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும்.சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் உறுதியேற் கின்றன. மக்களிடையே வகுப்புவாதப் பிரி வினையை ஏற்படுத்த முயலும் சக்திக ளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களது கொள்கையை மக்கள் நிராகரிக்க வேண்டும். அனைத்து சமூக மக்களும் அமைதியைக் கடைப் பிடிக்க வேண்டும்.

பன்முகத்தன்மைக்கு மரியாதை:

சமூகத்தில் அமைதியையும் நல்லிணக் கத்தையும் ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி களைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவ ரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண் டும். நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்துள்ளன. அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

நாட்டில் பலர் மக்களிடையே வகுப்பு வாதப் பிரிவினையை ஏற்படுத்தி வன் முறையைத் தூண்டி வருகின்றனர். வெறுப் புணர்வைத் தூண்டுவதற்கு சமூக வலை தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப் பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. அதன் காரணமாக, அத் தகைய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தால் மட்டுமே நாடு வளர்ச்சியடைய முடியும்

என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

கருநாடகத்தில் ஹிஜாப் சர்ச்சை, இராம நவமியின்போது ஏற்பட்ட வன்முறைகள் உள்ளிட்டவற்றின் பின்னணியில் எதிர்க் கட்சிகள் இந்தக் கூட்டறிக்கையை வெளி யிட்டுள்ளன.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் சிறு பான்மை மக்களுக்கு எதிராக அரசுகளே பக்கபலமாக இருந்து வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன.

இராமநவமி, ஹனுமன் ஜெயந்தி என்ற போர்வையில் வட மாநிலங்களில் அரசு களின் அதிகார துணையுடன் சிறுபான் மையினர் குறி வைத்துத் தாக்கப்படுகின் றனர். புல்டோசர்களைப் பயன்படுத்தி வீடு கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

உணவுப் பிரச்சினை என்பது தனி மனி தனின் உரிமை, அதில் கூட தன் மூக்கை நுழைக்கும் துர்நாற்றம் அருவருக்கத்தக்கது.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்க மனப் பான்மை வலுவாக நங்கூரம் பாய்ச்சப்பட வேண்டும் என்ற அடிப்படையில்நீட்என்றும், ‘புதிய கல்விக் கொள்கைஎன்றும் ஆழமான சதிக் குழிகளும், கண்ணி வெடிகளும் கூர் தீட்டப்பட்டுவிட்டன.

மதச்சார்பின்மை கடலில் தூக்கி எறியப்பட்டு வருகிறது. குடியரசு தின அரசு விளம்பரத்திலேயே - திமிர் தனத்துடன், வேண்டுமென்றேசெக்குலர்என்ற சொல் திட்டமிட்டு நீக்கப்படவில்லையா?

இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு சல்லி சல்லியாக நொறுக்கப் படுகிறது.

13 எதிர்க்கட்சிகள் வெறும் கூட்டறிக் கையை வெளியிடுவதோடு தம் கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. ஒன் றிய பாசிச பிஜேபி அரசை வீழ்த்தியே தீரு வது என்ற வீராவேசத்தோடு, விவேகத் தோடு, திட்டமிட்ட வகையில் செயல் படட்டும்!


No comments:

Post a Comment