ஒரத்தநாடு பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை சார்பாக உயர்கல்வி இணையவழி கற்றலில் கோவிட்-19 இன் தாக்கம் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கின் துவக்க விழா 30 மார்ச் 2022 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் பானுமதி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் வெங்கடாசலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர் இணையவழி கற்றலில் உள்ள பயன்பாடுகள் மற்றும் குறைபாடுகள் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் கற்றல் மற்றும் சமூக கலாச்சார பரிமாணங்கள் தற்போதைய சூழலில் தேவையான உத்திகள் என்னும் தலைப்பிலும், மேலும் அதனைத் தொடர்ந்து கல்வியின் டிஜிட்டல் கற்றல் எதிர் காலத்தை நோக்கிய மாற்றம் என்னும் தலைப்பிலும் சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சமூகபணித்துறை பேராசிரியர் ஆர்த்தி ஆகியோரின் தலைமையில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் பல கல்லூரிகளில் இருந்தும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் சுமார் 150-க்கும்மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் கி.சிவகாமி வரவேற்புரையாற்றினார்.

No comments:
Post a Comment