இன்றைய இளைய தலை முறையின ருக்கு அலைபேசி முகநூல், சுட்டுரை - இவற்றைத் தாண்டி நல்ல புத்தகங்களைப் படித்துப் பார்க்க ஆர்வம் குறைந்து வரு கிறது என்பதே ஒரு கசப்பான உண்மை மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. ஒரு தலை முறையின் சிந்தனைப்போக்கையே வெற் றிடமாக்கும் நிலை ஏற்படும் என்பதே வெள்ளிடை மலை,
புத்தகம் படிப்பது என்றால் வெகுஜனப் பத்திரிகை படிப்பது மட்டு மல்ல என்பதை எல்லோரும் உணர வேண்டும். ஒரு குழந் தைக்கு அதன் வீடே முதல் பள்ளிக்கூடமும், அதன் பெற்றோர்களே அதன் முதல் ஆசிரியர்கள் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். “முன் ஏர் போகிற பாதையிலேயே பின் ஏர் போகும்“ இதுகிராமத்துப் பழமொழி குழந்தைகளுக் குப் பெரும்பாலான பழக்க வழக் கங்கள் அதன் பெற்றோர்களிடம் இருந்தே வரு கின்றன. புத்தகம் படிப்பதும் அதில் ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆண்டு தோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அய்.நா. சபையின் ஒரு அங்க மான யுனெஸ்கோ சார்பில் 23.4.1996இல் ஜெனிவாவில் உலகப் பதிப்பாளர் மாநாடு நடந்தது. அப்போது ஆண்டுதோறும் ஏப் ரல்-23-ஆம் தேதியன்று ‘உலகப் புத்தக தினம்‘ கடைப்பிடிக்கத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஏப்ரல் 23-ஆம் நாள் ஆங்கில நாடக இலக்கிய மேதையான ஷேக்ஸ்பியர் பிறந்த நாளாகும். புத்தகங் களின் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் வகை யில் அனைவருக்கும் புத்தகங்களை அறி முகம் செய்ய வேண்டும் என யுனெஸ்கோ அறிவித்தது. புத்தகத்தின் விழாவையொட்டி யுனெஸ்கோ ஒரு பொன்மொழியையும் வெளியிட்டது. “நீங்கள் நேசிக்கும் ஒருவ ருக்கு உளமார ஒரு புத்தகம் பரிசளியுங்கள்’ என்பதே அது. கல்வி அறிவு வளர்ச்சி அடைந்த அளவுக்கு வாசிக்கும் பழக்கம் நம்மிடையே போதிய அளவு வளரவில்லை என்பதே ஒரு கசப்பான உண்மையாகும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய வற்றில் படிக்கும் மாணவர்களுக்கு வாசிக் கும் ஆர்வத்தை நம் கல்வி முறை போதிய அளவு ஊட்ட வில்லை என்பதே உண்மை யாகும். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரி யர்களும் போதிய அளவு அவ்வப்போது வரும் புதிய புத்தகங்களை வாசிக்கும் வழக் கம் உண்டா? என்பதே ஒரு கேள்விக் குறி யாகும்.
இருப்பினும். இன்று வாசிப்புத் திறன் முற்றிலும் குறைந்து விட்டது எனக் கூறிவிட முடியாது. ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான நாளிதழ்கள். வார இதழ் கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு பெருகியுள்ளது. எனவே. வாசிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இது பாராட்டத்தக்கது. ஆனால் வாசிப்பாளர்கள் எதை - எப்படிப்பட்ட புத்தகங்களை அதி கம் வாசிக்கிறார்கள் என்பதில்தான் கருத்து வேறுபாடு இருக்கலாம். இன்று. பொது வாகப் பல இடங்களில் புத்தக விற்பனைகள் நடைபெற்று வருகிறது என்பதே கண்கூடு.
அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம். அதை நாம்தான் சரியான வகை யில் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். இல்லங்கள் தோறும் நூலகம் இருக்க வேண் டியது அவசியம் என்றார் அண்ணா,
எகிப்தியர் கி.மு.300-ஆம் ஆண்டில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளைச் சேகரித்து வைத்திருந்ததே முதல் நூலகமாக அறியப் படுகிறது. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில்-ஜூலியஸ்சீசர் பல நூலகங்கள் உருவாக பெரு முயற்சி மேற் கொண் டதாக வரலாறு கூறுகிறது.
சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் சிறப்புக்குரிய நூலகமாகும். இது 1896-இல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தி யாவின் அனைத்து வெளியீடுகள், அய்.நா. யுனெஸ்கோ வெளியீடுகளும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 1990 வரை இங்கு 2 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 6 லட்சம் நூல்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக் கழக நூலகமும், சென்னையில் சிறப்பாக இயங்கும் இன் னொரு நூலகமாகும். இவ்விரு நூலகங் களிலும் பலதுறையைச் சேர்ந்த பன்மொழி நூல்கள் நிறைந்து கிடக்கின்றன. சென்னை அண்ணா சாலையில் இயங்கும் தேவநேயப் பாவாணர் மத்திய நூலகம் புகழ்பெற்றதாகும்.
சென்னை அடையாறில் உள்ள அடை யாறு நூலகம் தமிழகத்தின் பழைமையான நூலகம் ஆகும். ஸ்டீல் ஆல்காட் என்ற அமெரிக்கர் அரிய ஓலைச்சுவடிகள் மற் றும் பழைமையான நூல்க ளைச் சேகரித்து இந்த நூலகத்தை 28-12-1886இல் நிறுவினர். சுற்றுலாப்பிரியரான இவர் அடையாறை ஓய்விட மாகப் பயன்படுத்தினார். அங்கு தனக்காக உருவாக் கிய நூலகத்தை உலகப் புகழ் பெற்றதாக உயர்த்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பயணித்து பயனுள்ள நூல்களை நூலகத்தில் சேர்த்தார். இங்கும் லட்சக்கணக்கான நூல்கள் உள்ளன. அரிய, பழைமையான நூல்களின் கருவூலம் இந்நூலகமே, கொல்கத்தாவில் இன்னெரு புகழ்பெற்ற நூலகம் இருக்கிறது.
கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் மய்ய நூலகம் இதுதான். இந்தியாவின் பழைமையான நூலகமாகத் திகழ்கிறது. 12-12-1856-இல் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் செனட் இல்லத்தில் செயல்பட்டு வந்த நூல கம் 1912-இல் தனிக் கட்டடத்திற்கு மாறியது. தர்பங்கா மகாராஜா இதற்குப் பெரிதும் உதவினார். 1935வரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்ட இது, தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கும் கைகொடுக்கிறது. தற்போது இதில் சுமார் 6லட்சம் நூல்கள் உள்ளன.
டில்லியில் பிரசித்தி பெற்ற பொது நூல கம் டில்லி பப்ளிக் லைப்ரரி இருக்கிறது. இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து ஏற்படுத்திய சிறப் புக்குரிய நூலகம் இது. மாதிரி பொது நூல கங்களை உருவாக்கும் திட்டத்தில் 1951-ஆம் ஆண்டில் இந்த நூலகம் நிறுவப் பட்டது. ஆசியா விலேயே மிகவும் சுறு சுறுப்பாக நூல்கள் வழங்கும் நூலகம் என்று பெயர் பெற்ற நூலகம் இது. மய்ய நூலகமான இது சில பெரிய கிளை நூலகங்களையும், சிறு கிளை நூலகங்கள் பலவற்றையும் கொண்டு செயல்படுகிறது. இங்கு பார்வை இல்லாதவருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் உள்ளது. டில்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்தியாவின் கவுன் சில் நூலகம் இது. இதில் 1 லட்சம் நூல்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங் களு டன் இயங்கி வரும் முக்கிய நூலக மாகும். 1950 முதல் செயல்படும் இந்நூலகம் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்குப் பெரி தும் உதவுகிறது. புதுடில்லி மத்திய தலை மைச்செயலக நூலகம் (2.5 லட்சம் நூல்கள்), உ.பி.ஆசாத் நூலகம் (5 லட்சம் நூல்கள்), கோவா வரலாற்று ஆவணக் காப்பகம் டில்லி இந்தியன் நேஷனல் சயின்டிபிக் டாக்குமெண்டேஷன் சென் டர், அகமா பாத் ஜேந்தாபால் புத்தகாலயம், டில்லி நேஷனல் அர்க்கில்ஸ் அப் இந்தியா போன் றவை இந்தியாவின் குறிப்பிடத்தக்க நூல கங்களாகும்.
அமெரிக்காவில் உள்ள ‘லைப்ரரி ஆப் காங்கிரஸ்’ நூலகமே உலகின் மிகப் பெரிய நூலகமாகும் 1800-இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத் துப் பிரதிகள், லட்சக் கணக்கான நூல்களும், ஒலி, ஒளி நாடாக்களும் உள்ளன. இங்கி லாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தில் உள்ள போட்லி நூலகமே உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும். இந் தியாவில் 1000க்கு மேற்பட்ட மய்ய நூலகங் கள் உள்ளன. இவற்றின் கீழ் பெரிய கிளை நூலகங்களும், சிறு நூலகங்களும் செயல் படுகின்றன.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஊர்ப்புற நூலகங்களும், பல தனியார் நூலகங்களும் உள்ளன. தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் புதிதாக உரு வாக்கப் பட்டிருக்கும் நூலகம் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்‘. 2010-செப்படம்பர் 15-இல் இந்நூலகம் திறக்கப்பட்டது. இது 8 மாடி கட்டடத்தில் செயல்படுகிறது. இது கன்னி மாரா நூலகத்தை விடப் பெரியது. தெற்கு ஆசியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பையும் இது பெற்று இருக்கிறது. இங்கு தமிழ், ஆங்கிலம், மற்றும் பிற மொழி நூல் கள் தனித்தனித் தளங்களில் வைக்கப் பட்டுள்ளன. பிரெய்லி நூலகப் பிரிவும் தனியாக உள்ளது, இங்கு லட்சக்கணக்கான நூல்கள் சேகரிக்கப்பட்டிருப்பது தனி சிறப் பாகும்.
ஆம் இன்றைய இளைய தலைமுறை பாராட்டும். விஞ்ஞானி அய்ன்ஸ்டைன், அவருடைய சார்பியல் தத்துவம் விஞ்ஞானப் பார்வையையே புரட்டிப் போட்ட ஒன்று. அவர் தன்னுடைய சார்பியல் கணக் குகளுக்கான சூத்திரங்கள் எழுத்தாளர் தாய்ஸ்தவேஸ்கியின் புத்தகங்களில் மறைமுகமாகத் தெரிந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். ‘அவை வெறும் கற்பனைப் புத்த கங்கள் அல்ல’விஞ்ஞானக் கோட்பாடுகளை மகா புத்திசாலித்தனமாக வெளிப்படுத்திய மன சிந்தனையின் மகத்தான படைப்புகள் என்று குறிப்பிட்டார் அய்ன்ஸ்டைன். காந்தியார், மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள். அகிரா குரோசோவா, மஜுதி மஜீத், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்ற திரை இயக்குநர்கள், வேக்னர், ஜாவ்வென்னன், பாப் மார்லி போன்ற இசை மேதைகள் எல்லோரும் தங்களை உருவாக்கியவை புத்தகங்கள் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
வாசகர்கள் பன்னாட்டு அறிவுத்தேட லின் நிரந்தர அடையாளம், அவர்களுக் கான தினம் என்பது அனுதினமும் தான். நூல்களின் முக்கியத்துவத்தை உலகத் திற்கு உணர்த்தும் புத்தக தினம் ஒன்றை ஏப்ரல் 23 அன்று பன்னாட்டு சமுதாயம் அனுசரித்து வருகிறது. ஷேக்ஸ்பியரின் நாளில் உலக அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங் களை அனைவரும் அடைய சூளுரைப் போம். பிறந்த நாள் பரிசாகவும் - திருமண நாள் பரிசாகவும் குழந்தைகளின் விளை யாட்டுப் பொருளாகவும், நட்பின் சின்ன மாகவும் புத்தகங்களே நமது வாழ்வில் இடம்பெற இந்த நாள் வாழ்த்துகிறது.
உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்!

No comments:
Post a Comment