இதுவும் கடவுளின் கருணைதானோ? பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

இதுவும் கடவுளின் கருணைதானோ? பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்

பெரம்பூர், ஏப். 25- ஒடிசாவின் புரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து ஒரு பேருந்தில் பக்தர்கள் 50 பேர் சமீ பத்தில் புரி கோவிலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று (24.4.2022) அங்கி ருந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இந்த பேருந்து கஞ்சம் மாவட்டத்துக்கு உட்பட்ட ரம்பா அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அங்கு சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து கொண் டிருப்பதால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத் தில் 25 பக்தர்கள் காய மடைந்தனர். அதில் லேசான காயம் ஏற்பட்டுள்ள 21 பேர் சத்ராபூர் துணை மண்டல மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டனர். பலத்த காய மடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக பெராம்பூ ரில் உள்ள மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

No comments:

Post a Comment