ஏட்டு திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

தமிழ்நாடு அரசின் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி ஆணையர் விளக்கம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஆம் ஆத்மி பகத்சிங்கைப் புரிந்து கொள்ளாமல் அவரை கையகப்படுத்தியுள்ளது. கட்சியானது சித்தாந்தத் தால் அல்ல, அரசியல் தேவையால் இயக்கப்படுகிறது என் பதை இது காட்டுகிறது என கட்டுரையாளர் அசுதோஷ் குறிப்பிடுகிறார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நமது அரசமைப்பினை உருவாக்கிய தலைவர்கள் அதன் பன்முகத்தன்மையை அதன் முழுமையுடன் ஏற்றுக் கொள்ளும் ஒரு தேசத்தை கனவு கண்டார்கள். நமது கலாச்சார அடையாளங்களின் பன்முகத்தன்மையையே புல்டோசர் கொண்டு ஒன்றிய ஆட்சி இடித்துத் தள்ளுகிறது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கபில் சிபில் கருத்து.

கோட்சேவின் சித்தாந்தத்தை மோடி நேரடியாக ஆதரிக் கிறார் என டி.ஆர்.எஸ். தலைவர் கே.டி.ஆர் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

சீக்கிய குருவின் ஆண்டு விழாவில் மோடி அவுரங்கசீப் குறித்து பேசுகிறார். குரு தேக் பகதூரின் கொள்கைகளைப் பார்க்காமல் அவரது கதையை பிரதமர் கூறுகிறார் என  கட்டுரையாளர் அமந்தீப் சந்து குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய  மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு சாது, பிணையில்  வெளிவந்து, தனது பேச்சுக்கு வருத் தம் தெரிவிக்க முடியாது என்று உடனடியாக அறிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

ஜாதியால், மதத்தால் தமிழினத்தைப் பிளவுபடுத்தி வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

பல்கலைக்கழக பொதுத் தேர்வினை நியாயப்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment