275 கல்லூரிகளின் விடுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.20 கோடியில் இ-நூலகம்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

275 கல்லூரிகளின் விடுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.20 கோடியில் இ-நூலகம்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை, ஏப்.23- சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

* கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின் நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்திற்கு ரூ.80,000 செலவில் 275 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.2.20 கோடி செலவில் கணினி மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்படும்.

* மாணவ- - மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளுக்கு பதிலாக அவற்றை மறுசீரமைத்து தேவையுள்ள 15 இடங்களில் 1 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி விடுதிகளாக துவக்கப்படும்.

*  பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சீர் மரபினர் நல மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக பள்ளி மாண வியர் விடுதிகளில் காலியாக உள்ள 3224 இடங்களில் கல்லூரி மாணவியர் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கென ரூ.48.36 லட்சம் வழங்கப்படும்.

* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங் கிட செய்ய மதுரை மற்றும் தேனி மாவட் டங்களில் உள்ள 3 கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் உண்டு உறைவிட பள்ளிகள் 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் செலவில் துவக்கப்படும்.

* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் நலனுக் காக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட் டங்களில் உள்ள 2 கள்ளர் சீரமைப்பு உயர் நிலை பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளாக 1 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரம் செலவில் நிலை உயர்த்தப்படும்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவ தற்காக, 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் துவங்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர செலவு களுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

* அனைத்து விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் 3 முறை இலவச மருத்துவ பரிசோதனை செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த இடைநிகழ் செலவினமாக விடுதி, கள்ளர் பள்ளி ஒன்றிற்கு 2007ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் தொகையான ரூ.1000அய், ரூ.3000 ஆக உயர்த்தப்படும். இதற்கென ரூ.32.98 லட்சம் வழங்கப்படும். 

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் 

அனைத்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். 

பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறி இருப்ப தாவது:

ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீடு, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என தெரிய வருகிறது. 

எனவே, அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங் களிலும் இதர பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடஒதுக் கீட்டினை முழுமையாக நடைமுறைப் படுத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 

அனைத்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழுமை யான ஜாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பினை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment