ஒன்றிய அரசு கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொள்ளலாமா?
அன்னை மணியம்மையார் பிறந்த வேலூர், திருப்பத்தூரில் தமிழர் தலைவர் எழுச்சி உரை!
திருப்பத்தூர், ஏப்.23- தமிழகம் முழுவதும் பெண்கள் அதிகாரத் திற்கு வந்திருப்பது பெரியாருக்கு கிடைத்த வெற்றி என்றும், ஒன்றிய அரசு கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொள்ள முயல்கிறது என்றும் அன்னை மணியம் மையார் பிறந்த வேலூர், திருப்பத்தூரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப்பொதுக்கூட்டம் நேற்று (22.4.2022) திருப்பத்தூரிலும், வேலூரிலும் நடைபெற்றது.
கழகக்கொடிகள் நகரெங்கும் அமைக்கப்பட்டு மாநாடுபோல் காட்சியளித்தது. பெருந்திரளான பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர், கழகப்பொறுப்பாளர்கள், தோழர்கள் தமிழர் தலைவரின் உரைகேட்க பேரார்வத்துடன் திரண்டிருந்தனர்.
திராவிட மாடல் ஆட்சியின் பீடு நடை
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விடியல் ஆட்சி அமைந்த நாள்முதல் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி பாரெங்கும் சாதனை சரித்திரங்களை பறைசாற்றிய வண்ணம் உள்ளது. சமூகநீதி நாளாக தந்தைபெரியார் பிறந்த நாள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமத்துவநாளாக அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அறிவிக்கப்பட்டு சமூகநீதி, சமத் துவத்துக்கான வழியில் தமிழ்நாடு அரசு பீடு நடைபோட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்றும் வகையில், அதற்கு பெரும் தடையாக உள்ள நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா இரண்டு முறை நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசும், ஆளுநரும் அச்சட்ட மசோதாக்களை நிறைவேற்றித் தராமல் முட்டுக்கட்டை போடும் நிலை தொடர்ந்து கொண் டிருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் என்னும் சமூக நீதிக்கானது திராவிட மாடல்.
ஒன்றிய பாஜக அரசின் முட்டுக்கட்டைகள்
ஆனால், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் அதன் கொள் கையை அமல்படுத்தத் துடிக்கின்ற ஒன்றிய பாஜக அரசோ, அரசமைப்புச்சட்டப்படி செயல்படாமல், வருணாசிரம, மனு தர்மத்தை முன்னிறுத்துகிறது. அதன்படி, நீட் விலக்கு சட்ட மசோதாக்களை நிறைவேற்றிட குடியரசுத் தலைவருக்கு அம்மசோதாக்களை ஆளுநர் அனுப்பிவைக்காத நிலையில், சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
திராவிட மாடல் ஆட்சிக்கு
பாதுகாப்பு அரண் தமிழர் தலைவர்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடு முழுவதும் சமூகநீதிக்கொடியை பறக்கச் செய்யும் ஒருங் கிணைப்பை செய்து வருகிறது. சமூகநீதிக்கான ஆட்சியைத் தொடர்ந்து செயலாற்றிட சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறார்கள் என்று அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட் டு தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நாகர் கோயிலிலிருந்து 3.4.2022 அன்று தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில், மாவட்டத் தலைநகரங்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
பரப்புரைப் பெரும் பயண நிறைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் 25.4.2022 அன்று சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றுகின்றனர்.
தமிழர் தலைவரின் போராட்ட அறிவிப்பு
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணத்திலேயே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஹிந்தி மொழியைத் திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்துள்ளார். போராட்டம், பிரச்சாரம் என்று மக்களிடையே திராவிடர் கழகம் தொடர்ந்து செயலாற்றி வரும் இயக்கமாக உள்ளது. 30.4.2022 அன்று ஹிந்தி மொழியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசைக்கண்டித்து எழும்பூர் ரயில்நிலையத்தில் பெயர்ப் பலகையில் ஹிந்தியை அழிக்கும் போராட்டத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழர் தலை வர் இடும் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே தங்களை ஒப்படைத்துக்கொண்டுள்ள கட்டுப்பாடுமிக்க கழகப்பொறுப் பாளர்கள், தோழர்கள் சிறையேகத் தயாராகி வருகிறார்கள்.
தமிழர் தலைவருக்கு பெரும் வரவேற்பு
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் மேற் கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமிழ்நாடு முழுவதும் கட்சி அரசியல், மத, ஜாதி பேதங்களைக் கடந்து தமிழர்களாக ஒருங்கிணைந்து தங்களின் பேராதரவினை அளித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் தலைவர் வருகையை பெருவிழாவாகக் கருதி கொண்டாடி வருகிறார்கள். நீட் எதிர்ப்புப்பயண விளக்கப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, நன்கொடைகளை வழங்கி தமிழர் தலைவரை வரவேற்றனர்.
திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரைப் பெரும்பயணப்பொதுக்கூட்டம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் திருப்பத்தூர் சிவராஜ் விடுதி முன்பு மாவட்ட தலைவர் கே.சி.எழி லரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநில ப.க.எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம.கவிதா, மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மாநில மாணவர் கழக துணை செயலாளர் எ.சிற்றரசு, மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட துணை தலைவர் தங்க.அசோகன், நகர தலைவர் காளிதாசு, நகர செயலாளர் எ.டி.ஜி.சித்தார்த்தன், ப.க.மாவட்ட செயலாளர் அன்பு, மாவட்ட அமைப்பாளர் மா.சீ.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திருப்பத்தூரில் இருசக்கரப் பேரணி, பறை இசை என்று எழுச்சியுடன் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதற்கு சிகரம் வைத்தது போல் புதிதாக 53 இளைஞர்கள் தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். நேரமின்மை காரணமாக கூட்டணிக் கட்சித் தோழர்கள் பேச வாய்ப்பில்லை என்று தலைமை தாங்கிப் பேசிய திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் அனைவரிடமும் வருத்தம் தெரிவித்தார்.
தமிழர் தலைவர் உரை
இறுதியாக தமிழர் தலைவர் பேசினார். எடுத்த எடுப்பிலேயே, “இங்கே சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்றே தொடங்கினார். வரவேற்பு கொடுத்த தோழர்கள் உள்பட உணர்ச்சிப் பெருக்குடன் கைதட்டி மகிழ்ந்தனர். தலைமை உரையில் குறிப்பிடப்பட்டது போல், “இங்கே அனைத்துக் கட்சித் தோழர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் பேசி நான் கேட்டு, இறுதியில் தான் பேசுவேன். ஆனால், அடுத்தொரு கூட்டத்திற்குப் போக வேண்டியிருப்பதால், மற்றவர்கள் பேச முடியவில்லை” என்று தமிழர் தலைவரும் வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து, “இந்தப்பகுதியின் தவிர்க்க முடியாத பெரியார் பெரும் தொண்டர் ஏ.டி.கோபால், அவர்களின் நூற்றாண்டு விழா இன்னும் சில மாதங்களில் வரவிருப்பதால், நான் நிச்சயம் கலந்து கொள்வேன். அப்போது அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவிப்பு செய்தார்.
திருப்பத்தூரில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் பெரியார் புத்தகங்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது என்பதை நினைவூட்டி பலத்த கரவொலிக்கிடையே, “பெரியார் தான் உலகை ஆளுகிறார். அதையொட்டி தான் 50 மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்” என்று உற்சாகத்துடன் உரைத்தார்.
ஏற்பாடுகளின் சிறப்பைக் குறிப்பிட்டு, “பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. இதை விட்டுப் போவதற்கு எனக்கு மனமில்லை. ஆனால், கடிகாரம் என்னை நெருக்குகிறது” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். மறக்காமல் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்த மாவட்டத் தலைவரை பாராட்டினார்.
மேடையில் அமர்ந்திருந்த நகர்மன்றத் தலைவர் சங்கீதா அவர்களைக் குறிப்பிட்டு, ”பெரியார் என்றைக்கும் வெற்றி பெறுவார் என்பதற்கு எடுத்துக்காட்டு” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “சொல்ல வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால், குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. அதற்காகத்தான் ரூபாய் 10 க்கு ஒரு புத்தகம் போட்டிருக்கிறோம். அதை அனைவரும் வாங்கிப் படித்து பரப்பவேண்டும்” என்று சொல்லிவிட்டு, “இனிமேல் நமது பிள்ளைகள் கல்லூரிக்கே போக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. கல்வி வேலைவாய்ப்பில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறதல்லவா? இதைத்தான் ’திராவிட மாடல்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இவைகளுக்கெல்லாம் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதை உணர்த்துவதற்குத்தான்; மக்களுக்கு எழுச்சியை உண்டாக்குவதற்குத்தான் இந்த பயணம்” என்று இந்த பரப்புரைப் பயணத்தின் முக்கிய பகுதியை சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து, “இது அரசியல் பயணமல்ல, பா.ஜ. கட்சியி னருக்கும் சேர்த்துப் போராடக்கூடிய ஒரு பயணம்” என்று தங்களை எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்துச் சொன்னார்.
மேலும் தொடர்ந்த அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திராவிடர் இயக்கத்தின் பயணத்தை விவரித்தார். குலக்கல்வித் திட்டத்தைப் பற்றி விளக்கினார். வரலாற்றுத் திருப்பத்துக்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் பற்றியும், காரியமாக இருந்த காமராஜர் பற்றியும் எடுத்துரைத்தார்.
கல்வித்திட்டத்தில் மாநிலம், ஒன்றியம் என்று இரண்டு இருப்பதையும், மாநிலக் கல்வித் திட்டம் தாம் 90 விழுக்காடு என்றும், ஒன்றிய கல்வித்திட்டம் 10 விழுக்காடு என்றும் குறிப்பிட்டு, 10 விழுக்காடு கல்வித்திட்டத்தில் 90 விழுக்காடு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ள அவலத்தை தெளிவுபடுத்தினார். அரசியல் சாசனப்படி கல்வி என்பது அடிப்படை உரிமை என்றும், அதற்கு நேர் முரணாக தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது என்பதை வெறுமனே சொல்லாமல், அரசியல் சாசனப் புத்தகத்தை ஆதாரமாக்கினார். தொடர்ந்து, “இவைகளையெல்லாம் தடுத்து நிறுத்தத்தான் இன்றைய தி.மு.க. அரசு இருக்கிறது. அதை முடக்கத்தான் இப்படிபட்ட கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள்.” என்று சொல்லி, “ஆனால். எத்தனை பேர் அண்ணாமலைக்கு அரோகரா போட்டாலும் நடக்காது.” என்று உறுதியாகச் சொன்னார். மசோதாக்களை 200 நாட்களுக்கு மேல் வைத்துக் கொண்டுள்ள ஆளுநரை கண்டித்தார். “மக்கள் கொதித்துப் போயுள்ளனர். அதனால்தான் மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி, மக்கள் தங்கள் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார் கள். இது மாறவேண்டும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
மேடையிலேயே செய்தியாளர்களைச் சந்தித்து விட்டு, தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனது பரப்புரைப் படையுடன் வேலூர் நோக்கி சென்றார்.
பங்கேற்றோர்
இந்த பரப்புரை கூட்டத்தில் காமராஜர் நினைவு அறக் கட்டளை நிறுவன தலைவர் கணேஷ்மல், காங்கிரசு கட்சி பொதுக்குழு உறுப்பினர் ஏலகிரி செல்வம், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் கண்ணதாசன், ம.தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் காளி லிங்கன், ம.தி.மு.க.நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ம.தி.மு.க.நகர செயலாளர் இளங்கோவன், வி.சி.க.மாவட்ட செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் அண்ணாதுரை, தருமபுரி மண்டல செயலாளர் பழ.பிரபு, கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா.சரவணன், வே.அன்பு, திருமதி திருமுருகன் ஒன்றியக் குழுத் தலைவர் கந்திலி, அர.குமார் ஊராட்சி மன்றத் தலைவர் நத்தம், ப.பிரபு ஊராட்சி மன்றத் தலைவர் கந்திலி, விஜயலட்சுமி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம்பள்ளி, மோகனா ஊராட்சி மன்றத் தலைவர் செவ் வாத்தூர், அர.சுகுமார் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவல்நாயக் கன்பட்டி, எம்.சண்முகம் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னா ரம்பட்டி, தி.அழகிரி ஊராட்சி மன்றத் தலைவர் விஷமங்களம், ஆனந்தகுமார் ஊராட்சி மன்றத் தலைவர் ப.முத்தம்பட்டி, கவிதா குமார் மோட்டூர், லட்சுமி கார்த்தி. கொரட்டி, சி.ராமு சிங்காரம் குரும்பேரி, எஸ்.நந்தினி சரவணன். கெஜல்நாயக்கன் பட்டி, எஸ்.மகேந்திரன் பரதேசிபட்டி, சாந்தி பேராம்பட்டு, ராணி சின்னகண்ணு பள்ளத்தூர், மணிமாறன் பெரிய கண்ணாலபட்டி, ஆர்.தசரதன் மா.இ.அ.செயலாளர், நா.சக்கரவர்த்தி, கோவிந்தன் துணைத் தலைவர், அருணாசலம் ஊராட்சி மன்ற செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், திருப்பத்தூர் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கலைவாணன் நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருப்பத்தூரிலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணி அளவில் வேலூர் அடைந்தார்
வேலூரில் நடைபெற்ற பரப்புரைப்பெரும்பயணப்பொதுக்கூட்டம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில மகளிரணி அமைப்பாளர் த.தேன்மொழி இணைப்புரை வழங்கினார். மண்டல தலைவர் வி.சடகோபன், வேலூர் மண்டல மகளிரணி செயலாளர் ச.ஈசுவரி, மாவட்ட மகளிரணி தலைவர் ச.கலைமணி, பெரியார் மருத்துவ அணி செயலாளர் பழ.ஜெகன்பாபு, பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, மாவட்ட ப.க.தலைவர் அன்பரசன், மாநகர செயலாளர் சந்திரசேகர், மண்டல மாணவர் கழகச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
வேலூர் நகர்மன்றத் தலைவர், தி.மு.க. மாவட்டப் பொறுப் பாளர் ஆகியோர் பேசிய பிறகு தமிழர் தலைவர் பேசினார். நகர்மன்றத் தலைவர் சிறப்பாக பேசியதைக் குறிப்பிட்டு, “தந்தை பெரியாரை 95 வயது வரையில் வாழவைத்து, இந்த இயக்கத்துக்கு 5 ஆண்டுகள் தலைவராக இருந்து சாதனை செய்த அன்னை மணியம்மையார் பிறந்த மண் இந்த மண்” என்று பெண் மேயர் சிறப்பாகப் பேசினார் என்பதைச் சொல்லி, அதற்கு மேலும் வரலாற்று ஆதாரத்தை, அதுவும் வேலூர் மண்ணிலேயே பிறந்து, சிறந்த ஒரு பெண்மணியை உதாரணமாக்கி மேயரை உற்சாகப்படுத்தினார். மேலும், “நாங்கள் குமரியில் இருந்து புறப்பட்டு வருகிறோம். எல்லா இடங்களிலும் பெண்கள் அதிக அளவு அதிகாரத்திற்கு வந்திருப்பதைக் காணமுடிகிறது. இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி என்று பெயர் தோழர்களே!” என்று பலத்த கரவொலி களுக்கிடையே சொன் னார். திராவிடர் ஆட்சி தொடங்குவதற்கு முன் பெண்களின் நிலை எப்படியிருந்தது என்பதை இலேசாக நினைவுபடுத்தி, நிகழ்த்தப்பட்டு இருப்பது எப்படிப்பட்ட சாதனை என்பதை புரியவைத்தார். தொடர்ந்து வலது பக்கம் அமர்ந்திருந்த மேயரைப் பார்த்து, “உங்களை மேயராகப் பார்ப்பதைவிட பெரியாரின் வெற்றிக்கனியாகப் பார்க்கிறோம்” என்று சொல்லி, திராவிடர் இயக்கத்தின் கொள்கைப் பலத்தை தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து, ”இந்த இயக்கம் வந்திருக்காவிட்டால் இவ்வளவு கல்விக்கூடங்கள் வந்திருக்குமா? என்றொரு கேள்வி கேட்டு, 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்த மனுதர்மம் என்கிற குலதர்மம் கல்வி பற்றி விவரித்தார். அன்றைக்கு செத்த மொழியான சமஸ்கிருத மொழியை படிக்கக்கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு வாங்க, வாங்க என்று அழைக்கின்ற முரண் பாட்டையும், சூழ்ச்சியையும் அம்பலப்படுத்தினார்.
யாராக இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்ட வர்கள் தான் என்பதை, ஒன்றிய அரசுக்கும், ஆளுநருக்கும் அறிவுறுத்தினார். நீட் தேர்வால் ஏற்பட்ட அவலங்களை அரியலூர் அனிதாவை நினைவு படுத்தி புரியவைத்தார். புதிய தேசியக் கல்விக்கொள்கையின் சூழ்ச்சிகளை அம்பலப் படுத்தினார். இன்னாருக்கு இதுதான் என்றிருக்கும் இந்தக் கொள்கையை, அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட மாடலையும் ஒப்பிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து, தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அளித்துள்ள உறுதி மொழியில் இந்த அனைவருக்கும் அனைத்தும் என்று பெரியார் சொன்ன சமூகநீதிக்கான தத்துவத்தை பயன்படுத் தியிருப்பதை மறக்காமல் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு ஆளுநரை தபால்காரர் என்று எடுத்துக்காட்டுடன் விளக்கினார். ஹிந்தியை திணிக்க முயலும் அமித்ஷாவைக் கண்டித்தார். இறுதியாக, “இவைகளையெல்லாம் சொல்லத்தான் இந்தப் பயணம். உணருங்கள், பிறருக்கும் உணர்த்துங்கள். ஒன்றிய அரசு இவைகளை மாற்றவில்லை என்றால் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொள்வது போல் ஆகும் என்பதைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.” என்று முடித்துக் கொண்டார்.
கலந்துகொண்டோர்
இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க.மாவட்ட அவைத் தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முகம்மது சகி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் மா.சுனில் குமார் ம.தி.மு.க.உயர்நிலைக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மாநில ப.க.துணைத்தலைவர் அண்ணா.சரவணன், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர தலைவர் விசுவநாதன் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment