சென்னை, ஏப். 3- மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே யான பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூபாய் 5800 கோடியில் 30 மாதத்திற்குள் பணிகளை முடிக்க உள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக வும், சென்னைத் துறைமுக ஆணை யத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
சென்னைத் துறைமுக ஆணை யத் தலைவரும் காமராஜர் துறை முக மேலாண் இயக்குநருமான சுனில் பாலிவால் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் 1.4.2022 அன்று நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் இதனைக் கூறினார்.
மேலும் துறைமுகத்தில் கையா ளப்பட்ட பொருட்களின் அளவு, வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து விரிவாக பேசினார். சென் னைத் துறைமுகம் நாட்டிலேயே அதிகளவில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது என்றார். மேலும், காமராஜர் துறைமுகம் நாட்டிலேயே நவீன வசதிகள் உடைய துறைமுகங்களில் ஒன்றா கத் திகழ்ந்து வரும் அதே வேளை யில், செயலாக்கக் கட்டணம் மிகக் குறைவாக வசூலித்து நாட்டிலேயே முன்மாதிரியான துறைமுகமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சென்னைத் துறைமுகம் 2021-2022ஆம் ஆண்டு நிதியாண்டில் 111 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாவும், காம ராஜர் துறைமுகம் சுமார் 531.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள் ளதாகவும் தெரிவித்தார்.
மதுரவாயல் - சென்னை துறை முகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம் பேடு வரை இரண்டு அடுக்கு மேம் பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங் களும் செல்லும் வகையில் உருவாக் கப்படவுள்ளது என்றும் கூறினார்.
மதுரவாயலில் இருந்து சிறீ பெரும்புதூர் வரை பறக்கும் மேம் பால சாலை அமைப்பது தொடர் பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்
இந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னைத் துறைமுக ஆணைய துணைத் தலைவர் அருண்குமார், சென்னை பத்திரிகை தகவல் அலு வலக கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment