ஊரடங்கு தடையை மீறி மக்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

ஊரடங்கு தடையை மீறி மக்கள் போராட்டம்

கொழும்பு, ஏப். 3- இலங்கையில் இப்போது மிக மோச மான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள் ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட் டம் நடத்த தொடங்கி விட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்த ரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இலங்கை யில் வெள்ளி கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட் கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அதன்படி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி கொழும்பு வில் மக்கள் போராட் டம் நடத்தினர். அப்போது மின்சாரம் துண்டிக்கப் பட்ட நிலையில், இருட் டையும் பொருட்படுத்தா மல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment