அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் போராட்டம்: 120 விமானங்கள் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் போராட்டம்: 120 விமானங்கள் ரத்து

வாசிங்டன், ஏப். 3- கோரிக் கைகளை வலியுறுத்தி அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தங்களது பணி ஒப்பந்தங் களில் மாற்றம் செய்ய வேண் டும் என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவன  விமா னிகள் கடந்த 3 ஆண்டாக வலியுறுத்தி வரும் நிலை யில், விமான நிறுவனம் அதனை கண்டுகொள்ள வில்லை என தெரிகிறது.

இந்நிலையில் கோரிக் கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வலி யுறுத்தி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

கோரிக்கைகள் அடங் கிய பதாகைகளை ஏந்தி யபடி விமான நிலைய வாயில்களில் வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானிக ளின் அறிவிக்கப்படாத போராட்டத்தால் அமெ ரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக் கப்பட்டது. 120க்கும் மேற்பட்ட விமா னங்கள் ரத்து செய்யப்பட் டன. குறிப்பாக சியாட் டில், போர்ட்லாண்ட், ஓரிகான், லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு செல்ல முன்பதிவு செய் திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

விமானிகளின் போராட் டத்தை அடுத்து அவர்களது கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் அறிவித்தி ருக்கிறது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்ட விமானி ஒருவர் கூறுகையில், இது ஒரு அடையாள போராட் டம் மட்டுமே. இந்த போராட்டத்தின் மூலம் எங்கள் நிர்வாகத்திற்கு புதிய ஒப்பந்தத்திற்கான நேரம் இது என்ற வலு வான செய்தியை அனுப்ப நாங்கள் ஒன்று கூடியுள் ளோம் என்று குறிப்பிட் டார்.

No comments:

Post a Comment