பாரிஸ், ஏப். 3- உக்ரைன் மீது ரஷ்யா 40ஆவது நாளாக போர் தொடுத்து வருகி றது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷ்யா, இப் போது உக்ரைன் தலை நகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகி றது.
ரஷ்யாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உள்கட்டமைப்புகள் கடு மையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உக்ரைன் படை களும் சளைக்காமல் ரஷ் யாவுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, பெலாரஸ் மற்றும் துருக் கியில் இரு நாட்டு அதி காரிகளுக்கு இடையில் போர் நிறுத்தம் தொடர் பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ரஷ்யா நடத்திய தாக்குதலால் 50க்கும் மேற்பட்ட உக் ரைனின் நினைவுச் சின் னங்கள் சேதமடைந்தன. தேவாலயங்கள், வரலாற் றுக் கட்டடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்பட பல்வேறு கலாச் சார சின்னங்கள் போரி னால் சேதமடைந்துள் ளன என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment