வாசிங்டன், ஏப். 3- உக்ரைன் மீது ரஷ்யா 40ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடி வுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல் வியிலேயே முடிந்து வரு கின்றன. உக்ரைன் தலை நகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றன.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங் கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்தப் போரில் உக் ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங் கள், தளவாடங்கள் உள் ளிட்ட பல்வேறு உதவி களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் உக் ரைனுக்கு ஏற்கெனவே 1.6 பில்லியன் டாலர் மதிப்பி லான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் மதிப் பிலான ராணுவ ஆயுதங் கள் உள்ளிட்ட உதவி களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவின் ராணுவ தலைமையிட மான பென்டகன் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடி பொருட்கள், ராக்கெட்டு கள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது. உக்ரை னுக்கு அமெரிக்கா வழங்க உள்ள ராணுவ உதவிகள் இந்திய மதிப்பில் 2 ஆயி ரத்து 278 கோடி ரூபாய் ஆகும்.
No comments:
Post a Comment