அஷ்காபட், ஏப். 3- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் தலை நகர் அஷ்காபட்டுக்கு போய் சேர்ந்தார். துர்க்மெனிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை.
இந்த பயணத்தில், அந்நாட்டு அதிபர் செர்டர் பெர்டி முகாமெடோவை ராம்நாத் கோவிந்த் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்து கிறார். ஆப்கானிஸ்தான் பிரச்சினையும் இதில் இடம் பெறும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சக அதிகாரி சஞ்சய் வர்மா தெரிவித்தார். இந்த பயணத்தை தொடர்ந்து, நெதர்லாந்து நாட்டுக்கு 4 நாள் பயணமாக நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார்.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு
வரலாறு காணாத வீழ்ச்சி
இஸ்லாமாபாத், ஏப். 3- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது.
இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது.
சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் வெளி நாட்டுச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந் துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.
ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது பொருளாதாரத்தடை
வாசிங்டன், ஏப். 3- வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை அமைப் புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வட கொரிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நான்கு துணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அய்க்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங் களை மீறி, வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற் றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை ஆதரிப்பதற்காக அய்ந்து நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment