தமிழ்நாட்டில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு 15ஆவது நாளாக உயிரிழப்பு இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தமிழ்நாட்டில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு 15ஆவது நாளாக உயிரிழப்பு இல்லை

சென்னை, ஏப்.2 -தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (1..4.2022) புதிதாக 27 ஆயிரத்து 899 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்கள் 16 பேர் உள்பட 32 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 11 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 5 பேர் கரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று 25 மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை. இதில் 7 மாவட்டங்களில் தொடர்ந்து ஒருவருக்கு கூட கரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் கரோனா பாதித்தோர் சிகிச்சையிலும் இல்லை.  தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 857 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 293 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து 15ஆவது நாளாக நேற்று கரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 45 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment