சென்னை அய்.அய்.டி.யில் 33 பேர் உள்பட தமிழ்நாட்டில் 77 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

சென்னை அய்.அய்.டி.யில் 33 பேர் உள்பட தமிழ்நாட்டில் 77 பேருக்கு கரோனா

சென்னை, ஏப்.28 - தமிழ்நாட்டில் நேற்று (27.4.2022) 77 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் சென்னை அய்.அய்.டி.யில் மட்டும் 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நேற்றைய (27.4.2022) கரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

நேற்று புதிதாக 20 ஆயிரத்து 375 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 52 பேரும், பெண்கள் 25 பேரும் உள்பட 77 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 59 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி யுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 5 பேர் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 மாவட்டங்கள் கரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளன. இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 756 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்படைந்த 77 பேரில் சென்னை அய்.அய்.டி யில் மட்டும் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் தொடர்ந்து 41-ஆவது நாளாக நேற்று கரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

மேலும் நேற்றைய நிலவரப்படி 447 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் கரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment