12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு

 சென்னை,ஏப்.28- திருக்குறள் 12 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு வருவதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இயக்குநர் சந்திர சேகரன் கூறியதாவது: 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.அதிலும் திருக்குறள், தொல்காப்பியத்தை, அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை அறிவிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறது.

ஏற்கெனவே, திருக்குறள் மொழிபெயர்ப்பை படித்து, பிரதமர் வியந்து பாராட்டி உள்ளார். அவர் பேசும் பல மேடைகளில், திருக்குறளை மேற்கோள் காட்டியும் வருகிறார்.சமீபத்தில், சென்ன வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், திருக்குறளின் ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிபெயர்ப்புகள் வழங்கப்பட்டன. அவரும் சில திருக்குறள்களை படித்து, அதன் கருத்துக் களை வியந்து பாராட்டியுள்ளார்.

அந்த வகையில், ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, வாக்ரி - போளி, படகா, மலை யாளம் ஆகிய உள்நாட்டு மொழிகள் மற்றும் அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய அயலக மொழிகளில் தயாராகும் நூல்களை, பிரதமர் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம்.

அவர் வெளியிட்டால், உலக அறிஞர்களின் பார்வையில் பட்டு, பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இதற்கான ஏற்பாடுகளை, ஒன்றிய கல்வி அமைச்சகம் செய்து வருகிறது.

- இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment