சட்டசபையில் பொதுப் பணி துறைஅமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
சென்னை, ஏப்.13- தேனாம் பேட்டை-சைதாப்பேட்டை பேருந்து நிலையம் இடையே ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச் சர் எ.வ.வேலு கூறினார்.
தமிழ்நாடு சட்டசபை யில் நேற்று (12.4.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பின்பு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.அய்.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.அய்.டி. சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை ரூ.485 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்.
பூவிருந்தவல்லி காட்டுப்பாக்க150233த்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் ரூ.322 கோடி மதிப்பிலும், சென்னை உள்வட்ட சாலையில் பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் ரூ.100 கோடி மதிப்பில் இரு அய்ந்து வழித்தடமாக அகலப்படுத்தப் படும். தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
நடைமேம்பாலங்கள்
சென்னை மாநகர பகுதியில் உள்வட்ட சாலையில், செந்தில் நகர் சந்திப்பு, டெம்பிள் பள்ளி சந்திப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரும் படிக்கட் டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப் படும்.பொதுப்பணித் துறை யில் காலியாக உள்ள 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண் டில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.
பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்களாகிய எங்களை பாராட்ட வேண்டாம் என்று சொன்னாலும், முதல்-அமைச்சரின் செயல்பாடுக ளுக்காக இன்று அவரை ஜனநாயகமே பாராட்டுகிறதே. ஜனநாயகத்தின் நான்கு தூண்களும், அதாவது சட்ட மன்றம், நிர்வாகம், நீதித்துறை, பத்திரி கைகள் உங்களை பாராட்டுகிறதே. சட்டமன்றத்தில் மேனாள் பேரவைத் தலைவர் தனபால், மேனாள் அமைச் சர்கள் செங்கோட்டையன், விஜய பாஸ்கர் ஆகியோர் பாராட்டியுள்ளனர். அரசு நிர்வாகத்தை கவனித்து, முதலமைச்சர் மம்தா, பினராயி விஜயன், ஆந்திர மாநில அமைச்சர்ரோஜா உள்ளிட்டோர் பாராட்டுகின்றனர்.
நீதித்துறையை எடுத்துக் கொண் டால், சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பத்திரிகைத் துறையை எடுத்துக் கொண்டால், தினத்தந்தி தலையங்கம் உள்ளிட்ட பல பத்திரி கைகளின் தலையங்கங்களில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. அவர் திராவிடத் தூணை அமைக்க நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார். திரா விட மாடல் என்ற மக்களாட்சியை கட் டமைக்க அவர் 24 மணிநேரமும் உழைக் கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment