தி.மு.க.மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய சி.வி.எம்.பி.எழிலரசன் பேசும்போது,
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தி.மு.கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதும் ஒன்று. எந்த நியாயமும் இல்லாமல் ஆளுநர் இன்று சட்டத்தை மீறி நடந்து வருகிறார். ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு? என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை இப்போது நினைத்து பார்க்கிறோம்.
இரண்டு மாதங்கள் ஆகியும் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை. சட்டப்பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானத்தை ஆளுநர் அனுப்பி வைக்கிறாரா, இல்லை என்றால் ஆளுநரை திரும்ப அனுப்பிவிட வேண்டியதுதான் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த 90 வயதை தொடப்போகும் இளைஞர் நமது ஆசிரியர் அய்யா அவர்கள் குமரியிலிருந்து இந்தப் பயணத்தை தொடங்கி விட்டார்கள்.
இருமொழி கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இந்த அரசு உள்ளது. கல்வியை வர்த்தக மயமாக்கி வருகிறார்கள். இதை அனுமதிக்க கூடாது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம். ஆசிரி யரின் வழிகாட்டலில் வெற்றி பெறுவோம்.

No comments:
Post a Comment