சென்னை, ஏப்.13- “ஜேப்பியார் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த 92 ஏக்கர் நிலம் உடனடியாக மீட்கப்பட்டது. இந்த நிலம் அரசின் உபயோ கத்துக்கு பயன்படுத்தப்பட வுள்ளது. எந்தெந்த துறைக்கு இடம் தேவைப்படுகிறது என்பது குறித்து கேட்டுள் ளோம், விரைவில் அரசுத் துறை களுக்கு நிலம் ஒதுக்கப்படும்“ என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் நேற்று (12.4.2022) சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, “நகர்புறங்களில் அரசு நிலங்கள் கிடைப்பது என்பது அரிதாக இருக்கிறது. போலியாக பட்டா உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து அரசு நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க திமுக அரசு அரசாணை 64 வெளியிட்டுள்ளது. இதன்மூலம் எங்கெல்லாம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதோ, அவற்றை மீட்டு ரேசன் கடைகள் கட்டவும், நகராட்சி அலுவலகம், மின்வாரிய அலுவலகம், நீர்த் தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு இடமில்லாத சூழலில் அவற்றை பயன்படுத்த வேண்டும். சத்யபாமா கல்லூரியில் இருந்து 90 ஏக்கர் நிலம் அரசால் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசு நிலங்களை பல தனியார் கல்லூரிகள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித் துள்ளனர். எனவே இதை மீட்டெடுக்க அரசு முன்வருமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், “சென் னையை சுற்றியிருக்கின்ற 4 மாவட்டங்களில், இதே போல போலிப் பட்டாக்கள், சம்பந்த மில்லாத பத்திரங்கள் எல்லாம் நீண்ட நெடிய காலமாக இருக் கிறது. எனவே எந்தெந்த இடங்களில் இதுபோன்ற நிலை என்பது குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணமாக, ஜேப்பியார் கல்லூரியில் உள்ளதாக கூறிய வுடன் அங்கிருந்த 92 ஏக்கர் நிலம் உடனடியாக மீட்கப்பட் டது. இந்த நிலம் அரசின் உப யோகத்துக்கு பயன்படுத்தப்பட வுள்ளது. எந்தெந்த துறைக்கு இடம் தேவைப்படுகிறது என் பது குறித்து கேட்டுள்ளோம். நிலத்தை அந்தந்த துறைகளுக்கு நாங்கள் ஒதுக்கி தரப் போகி றோம்.
எனவே இந்த இடத்தைப் போன்று முழுமையாக பெரிய இடங்களாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக் கப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள சிறிய இடங்களை எல்லாம், அந்த இடத்தில் அரசாங்கத் துக்கு கட்டடம் கட்டப்படும் தேவை ஏற்படும் நேரத்தில், அந்த இடங் களை காலி செய்து அரசாங்க கட்டிடங்கள் கட்டப்படும்“ என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment