விருந்தோம்பல் கல்வித்துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

விருந்தோம்பல் கல்வித்துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

சென்னை, ஏப்.28-  விருந்தோம்பல் கல்வித் துறையில் உள்ள சென்னைஸ் அமிர்தா நிறுவனம், ஒரே வேலை வாய்ப்பு முகாமில் வெளிநாட்டு வேலைகளை 948 மாணவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. 

சென்னை, பெங்களூரு, அய்தராபாத் வளாகங்களில் பயிலும் சென்னைஸ் அமிர்தா மாணவர்கள், சென்னை (செங்கல்பட்டு) வளாகத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். 

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கனடா, துருக்கி, போர்ச்சுகல், மத்திய கிழக்கு மற்றும் அய்க்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய், ஓமன், பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்டவற்றில் வேலைக்கு சேர உள்ளனர். 

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர்  ஆர். பூமி நாதன் கூறுகையில், 

பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த தேர்வாளர்கள் எங்கள் கல்லூரியில் இருந்து 948 மாணவர்களை அயல்நாடுகளில் வேலைக்குச் சேர்த்திருப்பது பெரிதும் உற்சாகம் அளிக்கிறது.  

விருந்தோம்பல் துறையின் எதிர்கால திறமை யாளர்களை வளர்த்தெடுப்பது எப்போதும் எங்கள் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. 

விருந்தோம்பல் துறையில் திறமைகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க உந்து சக்தியாக இருப்போம் என்றார்.


No comments:

Post a Comment