போலி சான்றிதழ்: சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

போலி சான்றிதழ்: சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

சென்னை, ஏப்.28 போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் சென்னை மாநிலக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில துறை உதவி பேராசிரியர்கள் காமாட்சி, சேது லதா ஆகிய இருவரும் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியான நிலையில் கல்லூரி நிர்வாகம் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment