அரியலூர் மாவட்ட அளவிலான வலைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

அரியலூர் மாவட்ட அளவிலான வலைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடம்

அரியலூர் மாவட்ட அளவிலான 7ஆவது சீனியர் வலைப்பந்து மகளிர் போட்டியும், 4ஆவது 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து போட்டியும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் 24.04.2022அன்று நடைபெற்றது. 

இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டார்கள். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு மூன்றாமிடம் பிடித்து வெற்றிபெற்றுள்ளார்கள். 

வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment