இடிமேல் இடி! ஜிஎஸ்டி வரி உயர்த்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

இடிமேல் இடி! ஜிஎஸ்டி வரி உயர்த்த முடிவு

புதுடில்லி, ஏப் 25 சர்க்கரை, அப்பளம், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட வாய்ப் பிருப்பதாக வெளிவந்திருக்கும் தக வல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், சமையல் எரி வாயு பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சர்க்கரை, அப்பளம், சாக்லெட் உள் ளிட்ட 143 பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 26 வீதமாக உயர்த்தலாம் என மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி இருந்து வரும் நிலையில் 10 சதவீதம் உயர்த்த மாநில அரசு களிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

No comments:

Post a Comment