இலங்கையில் தொடரும் போராட்டம் ராஜபக்ஷேவின் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

இலங்கையில் தொடரும் போராட்டம் ராஜபக்ஷேவின் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்

கொழும்பு, ஏப் 25- இலங்கையில் ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தி, காவல்துறையினரின் தடைகளைத் தாண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொரு ளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச அரசு பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து வரு கிறது. தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பல் கலைக்கழக மாணவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடைகளை மீறி பிரதமர் வீட்டு முன்பு கூடிய மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பேரணியாக சென்ற மாணவர்கள், அதிபர் அலுவலகம் எதிரே உள்ள காலிமுகத்திடலில் கூடி, இரவில் அலைபேசி விளக்குகளை ஒளிரச் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக் களத்தில் பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இலவச சட்ட உதவி அலுவலகமும் நிறுவப்பட் டுள்ளதானது பலரின் கவனத்தை பெற் றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு இம் முகாமிலேயே உதவிகள் செய்யப்படு கின்றன. அரசுக்கு எதிரான போராட் டம் மக்கள் கிளர்ச்சியாக வெடித்து தீவிரம் அடைந்து வருவதால், இலங்கை யில் பதற்றமான சூழலே நிலவுகிறது.

No comments:

Post a Comment