கதிராமங்கலத்தில் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

கதிராமங்கலத்தில் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

குடந்தை கழக மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றிய கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் 21-04-2022 வியாழன் மாலை 6.00 மணியளவில் கதிராமங்கலம் கடைவீதியில் நடை பெற்றது. கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொது மக்களும் திரளாக பங்கேற்றனர். 

குடந்தை சேய்குளம் 

குடந்தை மாவட்ட கழக வழக்குரைஞரணி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 20.04.2022 புதன் மாலை 6.00 மணியளவில் குடந்தை சேய் குளம் அருகில் நடைபெற்றது. கழக பேச்சாளர்  முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். 

திருவிடைமருதூர்

குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 23-04-2022 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாச்சியார்கோவில் கடைவீதியில் நடைபெற்றது. கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.


No comments:

Post a Comment