பாபநாசம் கடைவீதியில் பரப்புரைப் பயண விளக்க தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

பாபநாசம் கடைவீதியில் பரப்புரைப் பயண விளக்க தெருமுனைக்கூட்டம்

பாபநாசம், ஏப். 25- குடந்தை கழக மாவட்டம், பாப நாசம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர் கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப் புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 22.-04.-2022 வெள்ளி மாலை 6.00 மணியளவில் பாபநாசம் கடைவீதியில் நடைபெற் றது. கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக் களும் பெரும் திரளாக பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment