தருமபுரி, ஏப். 23- பரப்புரைப் பெரும் பயணமாக தருமபுரி வருகை புரிந்த திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தர்மபுரி கோவேந்தன் கட்டியுள்ள சோழன் இல் லத்தை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில், ”குமரியில் தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் காலையில் ஓய்வெடுங்கள் என்று தோழர் கள் சொல்வதுண்டு. ஆனால், சோழவேந்தன் இல்லம் அறி முக விழா என்று கேட்டதும், “எவ்வளவு சோர்வாக இருந்தா லும் நான் வருகிறேன் என்று உடனே நான் ஒப்புக்கொண் டேன்” என்று கைதட்டல்களுட னேயே தொடங்கினார்.
தொடர்ந்து பழைய பென் னாகரத்தில் டாக்டர் எம்.என். நஞ்சையா, சச்சிதானந்தம், பி. கே.ராமமூர்த்தி போன்றவர் களை 1945களில் தன்னுடைய மாணவர் பருவத்தில் பரப்புரை செய்ய வந்திருப்பதை உற்சாகத் துடன் நினைவு கூர்ந்தார்.
அன்றைக்கு தலைவராக இருந்த எம்.என்.நஞ்சையா ஜமீன் தாராக இருந்தவர்; கடைம டைக்காரர். அவருடைய முயற் சியில்தான் அந்த ஊருக்கே மின்சாரம் கிடைத்தது. அவரு டைய மறைவுக்குப் பிறகு, அவர் இல்லையே என்ற வருத் தத்தை போக்கியவர் நம்மு டைய தீர்த்தகிரி அவர்கள்” என்று கோவேந்தன் தந்தையை சுட்டிக்காட்டியபடி பேசினார்.
தீர்த்தகிரியுடன் இணைந்து மாவட்டத்திலுள்ள எல்லா கிராமங்களிலும் பரப்புரைப் பயணம் செய்ததைச் சொன் னார். தீர்த்தகிரி முரட்டுத் தனமான சுயமரியாதைக்காரர் என்று சுட்டிக்காட்டினார்.
”கடவுள் இல்லை, பார்ப் பானைத் திட்டறாங்க என்று இரண்டே வகையில் பெரியா ரைச் சுருக்குகிறார்கள். கட வுளை மற! என்று சொன்ன பெரியார்தான் மனிதனை நினை! என்று சொல்லிவிட்டு, காலையில் படித்த ஒரு செய் தியை பகிர்ந்துகொண்டார். அதாவது, துடைப்பத்தால் அடித்துக்கொள்வதை ஒரு திருவிழாவாகவே கொண் டாடுவதையும், என்னையும் துடைப்பத்தால் அடிங்க, அடிங்க என்று கேட்டு கேட்டு அடி வாங்குவதையும் குறிப் பிட்டு, தாய்மார்களுக்கு கோபம் வரும்போது துடைப்பத்தா லேயே அடிப்பேன் என்பார் கள். இங்கே தலைகீழாக இருக் கிறது என்று குறிப்பிட்டதும் வெடித்துச் சிரித்தனர் மக்கள். “பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்ற பெரியாரின் பொன் மொழியை சேர்த்துச் சொன் னதும் கைதட்டலின் பலம் கூடியது.
தொடர்ந்து, “நாங்க திறப்பு விழான்னுகூட சொல்லுவ தில்லை, ஏற்கெனவே திறந்த பிறகுதான் உள்ள வருகிறோம். அதனாலேயே இல்ல அறிமுக விழான்னு சொல்கிறோம்” என்று எதிலும் ஏன், எதற்கு, எப்படி என்கின்ற தங்களின் பார்வையை சொல்லாமல் சொன்னார்.
புரோகிதரை வைத்து நடத்தும் கிரகப்பிரவேசத்தில் இருக்கும் சங்கடங்களை சுட் டிக்காட்டினார். கிரகப்பிர வேசம்தான் இல்ல அறிமுக விழா என்று மாற்றியதும் இந்த இயக்கம்தான்” என்று பலத்த கரவொலிகளுக்கிடையே எடுத்துரைத்தார்.
பெரியார் சொன்ன படிப் புக்கும், அறிவுக்கும் சம்பந்த மில்லை என்பதை சிரிக்க, சிரிக் கச் சொன்னார். மனுதர்மத்தில் வீடு கட்டுவதைப் பற்றி இருப் பதைச் சொல்லி சுயமரியாதை உணர்வூட்டினார். அந்த மனுதர்மத்தை ஒழித்தால்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட் டிருக்கின்றன என்பதைச் சொல்லி, வாஸ்து முறையில் இருக்கும் ஜாதியை நிலை நிறுத்தும் கருத்துகளை எடுத்து ரைத்தார். அதன் மூடநம்பிக் கைகளை போட்டுடைத்தார். போலி விஞ்ஞானத்தை ஏற்கா தீர் என்று கோரிக்கை விடுத் தார். எங்கே தன்னம்பிக்கை இருக்கிறதோ அங்கே மூட நம்பிக்கை இருக்காது. அத னால்தான் இவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரியாரை பின்பற்றினால், வாழ்வியலாக பின்பற்றினால் வெற்றி பெறலாம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

No comments:
Post a Comment