டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப் பட்ட விவகாரத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை விழாவில் ஆளுநர் பட்டம் வழங்கினார் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் பொன்முடி, கடலூர் மாவட் டத்தை சேர்ந்தவரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நேற்று (18.4.2022) நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டனர்.
உ.பி., ம.பி., குஜராத் மாநிலங்களில் குற்றம் சாட்டப் பாட்ட சிறுபான்மையினர் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பான நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால், அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டத் தைக் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று சட்டப் பேர வையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
ஒன்றிய தேர்வாணைய குழுவின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சோனிக்கு பாஜ, ஆர்எஸ்எஸ்சுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மனோஜ் சோனியின் மேனாள் சக ஊழியர்கள் மேற்கோள் காட்டிய சம்பவங்களில் ஒன்று பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக வளாகத்தில் அவர் துணைவேந்தராக இருந்தபோது நடந்த கலவரங் கள் நடந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) 2023 முதல் ஆண்டுக்கு இருமுறை இளங்கலைப் படிப்பு களில் சேர்க்கை நடத்தப்படும், இது ஆர்வமுள்ளவர் களுக்கு அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த கூடுதல் வாய்ப்பளிக்கிறது என ஒன்றிய கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒன்றிய அரசுத் துறைகளுக்கான பணியாளர் தேர் வில் இந்தி மொழி அறிவை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்றும் இது விதிகளை மீறும் செயலாகும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment