வெட்டிக்காடு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

வெட்டிக்காடு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா

வெட்டிக்காடு, ஏப்.2- வெட்டிக்காடு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 19.3.2022 அன்று காலை 8.30 மணியளவில் விளையாட்டு விழா  மற்றும் ஆண்டு விழா ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலர் இரா.அண்ணாதுரை  முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  

பள்ளியின் முதல்வர்  செ.செயந்தி வரவேற்புரை வழங்கினார்.ஒரத்தநாடு கல்வி மாவட்ட அலுவலர்  வாழ்த்துரை வழங்கி, மாணவர்களுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவற்றின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 2021 முதல் 2022 வரையுள்ள தங்களின் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்திய பெற்றோர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.  சில்லத்தூர், வெட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக கண்கவரும் வகையில் நடைபெற்றன. பெற்றோர்கள் இவ்விழாவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்புற நடத்தினார்கள்.பள்ளித் துணைமுதல்வர் மு.அன்புச்செல்வி   நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது.


No comments:

Post a Comment