உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை

புதுடில்லி, ஏப்.2-  ஏப்ரல் 4ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் முழுவீச்சில் நேரடி விசாரணை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் அனைத்தும் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காணொலி விசாரணை நடைபெற்று வந்தது. மற்ற நாட்களில் நேரடி விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் முழுவீச்சில் நேரடி விசாரணை தொடங்கும் என்றும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டால் காணொலி விசாரணைக்கான இணைப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். 

No comments:

Post a Comment