வல்லம், ஏப்.2 -பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் மூன்றாமாண்டு மாணவர் களுக்கு வளாக நேர்காணல் நடைபெற்றது.
வல்லம், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல் லூரி யில் தொழிலக பயிலக இணைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற தொழிற்சாலைகளின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்து வளாக நேர்காணல் நடத்துவதன் மூலம் இக் கல்லூரி மாணவ மாணவி களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. சென்னை, அப்பல்லோ டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து 22.03.2022 அன்று நடத்திய வளாக நேர்காணலில் இப் பாலிடெக்னிக் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மார் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வளாக நேர் காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள இக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா சான்றிதழ்கள் வழங்கி பாராட் டினார். 2021 - 2022ஆம் கல்வி ஆண்டில் கோயம்புத்துர், சக்தி ஆட்டோ காம்பொனண்ட் லிமிடெட்; சென்னை. டெல்பி டி.வி.எஸ் லிமிடெட்; சென்னை, ராயல் என்பீல்ட் அகாடமி; பாண்டிச்சேரி, லூகாஸ் டி.வி.எஸ் ; சென்னை, நோக்கியா சொல் யூசன்ஸ் நெட்வொர்க்; சென்னை, செயிண்ட் கோ பெய்ன் ; கோயம் புத்தூர். எல் அண்ட் டி , சென்னை, எஸ்.கே. எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவ னங்களுடன் இணைந்து நடை பெற்ற வளாக நேர்கா ணலில் இக் கல்லூரியின் மூன்றா மாண் டில் பயிலும் மார் 230 மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் பட்டது.

No comments:
Post a Comment