சென்னை, ஏப்.8- பன்னாட்டு கல்விச் சேவைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான அய்டிபி, 2022ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய சேர்க்கை தினத்தை 6.4.2022 அன்று கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 27 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்த அமர்வில் பங்கேற்றன, இந்நிகழ்வு இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கள் கல்வி வாய்ப்புகளை ஆராய சிறந்த ஒரு வாய்ப்பாகும். மாணவர்கள் தங்களது அடுத்த கல்விப் பயணத்திற்குத் தயாராவதற்கு உதவுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும், இந்நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதரக ஆலோசகர், திருமதி சாரா கிர்லேவ் பேசுகையில், ஆஸ்திரேலியா-இந்தியா உறவில் கல்வி நீண்ட காலமாக முதன்மையான துறையாக இருந்து வருகிறது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்திய மாணவர்களை மீண்டும் எங்கள் நாட்டிற்கு வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் ஆஸ்திரேலிய கல்வி அவர்களுக்கு வழங்கும் தரம், மதிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை முறை, உதவித்தொகை மற்றும் வேலை உரிமைகள் ஆகியவை குறித்து அறிவதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இன்று உற்சாகமாக ஈடுபட்டதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment