சென்னை, ஏப்.8-இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த நோயறிதல் சேவை வழங்கும் நிறுவனமான மெடால் ஹெல்த்கேர், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை பாதிப்பு விகிதத்தில் ஆபத்தான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
மெடாலின் வெல்னஸ் ஆலோசகர் டாக்டர் அகிலா ரவிக்குமார் கூறுகையில், நீரிழிவு புள்ளி விவரங்கள் அதிகமாக இருந்தாலும், குறைந்தது 60% பேருக்கு இந்நோய் கண்டறியப்படாமல் உள்ளது கவலைக்குரியது, ஏனெனில் மக்கள் அவ்வப்போது உடல் நலப் பரிசோதனைகளைச் செய்ய நடவடிக்கை எடுக்காத போது நோய் ஆபத்து அதிகரிக்கிறது, தடுப்பு சுகாதார பரிசோதனைகள் அவர்களுக்கு உடற்கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும். உடல் பருமன், இந்தியாவில் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே வயிற்று பருமன் பாதிப்பு கணிசமாக அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் என்பது அரசாங்கத்தின் முக்கிய மருத்துவ மற்றும் நிதிச்சுமைகளில் ஒன்றாகும். இந்தியர்களுக்கு அதிக அளவு இன்சுலின் எதிர்ப்பு உள்ளது என்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன, அவை முன்கூட்டியே கண்டறிந்து சரி செய்யப்படாவிட்டால் நீரிழிவு நோயாக மாறும்.என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment