1. நம் பிள்ளைகள் மருத்துவர்களாக ஆவதைத் தடுக்கும் 'நீட்' தேர்வு என்ற "கண்ணிவெடியை" உடனே அகற்ற வேண்டும். 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதியாக அனிதாவுக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லையே?
2. 'நீட்' தேர்வு குறித்து வாக்குறுதி அளித்தபடி சமத்துவ வாய்ப்பை உருவாக்கிடவில்லை. இது (CBSE) சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான தேர்வு - சமச்சீர் கல்வி படித்த மாணவர்கள் எப்படி இந்தத் தேர்வை எழுதுவது?
3. முதல் தலைமுறை மாணவர்கள் தேர்வு எழுதும்போது அங்கே "சமநிலை" இல்லவே இல்லை.
4. 'நீட்' அதன் உருவாக்கத்தின் நோக்கத்தை உறுதியாக நிறைவேற்றவே இல்லை.
5. 'நீட்' தேர்வு தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டது.
6. 'நீட்' தேர்வு தகுதியை அதிகரிக்காது.
7. ஒரே இரவில் என்.ஆர்.அய். ஆகி 158 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இது எப்படி?
8. ஏழை மக்களை வெளியேற்றும் நோக்கத்தை 'நீட்' நன்றாகவே நிறைவேற்றிக் கொண்டது.
9. உடனே தமிழ்நாட்டிற்கு 'நீட்' அய் ரத்து செய்து, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உரியதை ஒன்றிய அரசு செய்ய வேண்டியது அதன் நீங்காத கடமையாகும்!
- க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி
No comments:
Post a Comment