நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

நன்கொடை

வேலூர் மாவட்டம் காரணாம் பட்டு கிராமம் சுயமரியாதைச் சுடரொளி செ.ப.தருமன் (தையல் கலைஞர்) கழகத்தின் அறிவிப்பின் படி 1978இல் மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தோழர்களுடன் வேலூர் சிறையில் இருந்துள்ளார். தனது மறை விற்கு பிறகு உடலை மருத்துவக் கல்லூ ரிக்கு பயன்படும் வகையில் உடற் கொடை வழங்குமாறு எழுதி வைத்திருந்தார். இந் நிலையில் 27.4.2010அன்று நெஞ்சுவலி காரணமாக மறை வுற்றார். அவரது விருப்பத்தின்படியே 28.4.2010 அன்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப் பட்டது. அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் வாழ்விணை யர் பேபி சின்னசாமி, மகன்கள் தருமன் வீரமணி (பகுத்தறி வாளர் கழக மாநில துணைத்தலைவர்),  மகள்கள்  அமுதா, யசோதா, லட்சுமி அசோகன்,  சரஸ்வதி மற்றும் பேரப் பிள்ளைகள் அ.வீ. தங்கமணி, மருத்துவர் அ.வீ.தமிழ்ச் செல்வி, அ.கு. செல்வன், அ.கு. செல்வி, இல.அ.உலகன், இல.அ.தமிழ்ச் செல்வன், த.பே.ஆதவன், த.பே.ஆதிரா குடும்பத்தினர் 12ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.


No comments:

Post a Comment