வேலூர், ஏப் 3 திருப்பத்தூர் அருகே மலைப்பாதையில் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே ஊரை சேர்ந்த 11 பெண் பக்தர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பேருந்து போக்குவரத்து அதிகம் இல்லாததால் வேன் உள்ளிட்ட வாகனங்களையே மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று (2.4.2022) ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். ஆண்கள் இருசக்கர வாகனங் களிலும், பெண்கள் வேன்களிலும் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது.
அதன்படி சிறியவாகனம் வரவழைக்கப் பட்டு அதில் 30 பெண்கள் ஏறிக் கொண் டனர். மினிவேனை சேம்பரை கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் ஓட்டிச்சென்றார்.
கரடுமுரடான பாதையில் தடுமாறிய வேன் 50 அடி பள்ளத்தில் குட்டிக்கரணம் அடித்தபடி உருண்டு கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த பெண்கள் ஒருவர் மீது ஒருவர் மோதியபடி இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர்.
இரு சக்கர வாகனங்களில் சென்ற ஆண்கள் தங்கள் கண் எதிரிலேயே வேன் உருண்டு கவிழ்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கு சென்றனர். அலைபேசி கோபுரமும் அங்கு இல்லாததால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் மீட்பு பணியில் அவர்களாகவே ஈடுபட் டனர்.
இதில் வேனின் இடிபாடுகளில் சிக்கி புலியூரை சேர்ந்த சுகந்திரா(வயது 55), துர்கா(40), பவித்ரா(18), பரிமளா(12), செல்வி(35), மங்கை(60), அலமேலு(12), சென்னம்மாள்(12), திக்கியம்மாள்(30), ஜெயபிரியா(16), சின்னதிக்கி(22) ஆகிய 11 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதில் துர்கா, பவித்ரா, பரிமளா ஆகியோர் தாய், மகள்கள் ஆவர். இந்த விபத்தில் மினிவேன் ஓட்டுநர் பரந்தாமன் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனை நோக்கி புறப்பட்டனர். அதற்குள் தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா காவல்துறை அங்கு விரைந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதி யிலிருந்து 7 ஆம்புலன்ஸ்கள் அங்கு வர வழைக்கப்பட்டு படுகாயத்துடன் இருந்த வர்கள் ஏற்றப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர்.இந்த துயர விபத்து குறித்து திருப் பத்தூர் தாலுகா காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனம் மலையில் உருண்டு ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment