பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! டில்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! டில்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

புதுடில்லி, ஏப்.3- ஒன்றியத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டில்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண் டிருந்த திமுக தலைவர், முதலமைச்சர்

மு..ஸ்டாலின் டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய அரசியலில் திமுக எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிரதமர், குடியரசுத் தலை வராக யார் இருக்க வேண்டும் என்று தேர்வு செய்வதில் திமுக முக்கியக் கட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும் திமுக மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியாகும். மாநில அரசியலுக்கும், தேசிய அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மாநில அரசியலை ஒருங்கிணைத்ததுதான் தேசிய அரசியலாகும். ஆகையால், இரண்டையும் பிரிக்கக்கூடாது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

'தேசிய அரசியலை காங்கிரசை எதிர்பார்க் காமல் மாநில கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்' என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரி வித்திருக்கும் கருத்து சில மாநிலங்களுக்குப் பொருந்தும். பல மாநிலங்களில் இது தவறாக வழிநடத்திவிடும்.

பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரி களுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்று மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை ஓரம் கட்டியுள்ளன.

தமிழ்நாட்டில் வெறும் தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி அமைக்காமல், கொள்கைக் கூட்டணி அமைத்து தேர்தலில் இடங்களைப் பங்கிட்டு சந்திப்பது எங்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் மாநிலக் கட்சிகளுடன் தேசிய அளவில் நட்புறவை மேம் படுத்த வேண்டும். இதற்காக அனைத்து மாநிலங் களிலும் குழுக்களை அமைக்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியை வலியுறுத்துகிறேன்.

ஒற்றுமைதான் பலம் என்பதை புரிந்து கொண்டு, நாட்டை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் தனிநபர் அரசியல் நிலைப்பாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும்.

பாஜக எதிர்ப்பு ஏன்?

பாஜகவை தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியும் எதிர்க்கவில்லை. அக்கட்சியின் கொள் கைகளை எதிர்க்கிறோம். இது எப்போதும் தொடரும்.

நீட் விலக்கு மசோதா

தமிழ்நாடு ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே யான உறவு நன்றாக உள்ளது. அவர் தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்துவதில் ஆர்வத்துடன் உள்ளார்.

அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட சில கோரிக்கைகள்மீது முடிவு எடுப் பதில் அவர் நீண்ட தாமதம் செய்து வருகிறார். இரண்டாவது முறை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

நதிநீர் பிரச்சினை காவிரி, முல்லைப் பெரி யாறு அணை விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக் கைகளையும் அரசு எடுக்கும்.

விசாரணை அமைப்புகள்

ஒன்றிய விசாரணை அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு சில நேரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும் என்றார்.

No comments:

Post a Comment