பாஜக வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

பாஜக வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி பரப்புரை

குமரி, ஏப். 19- ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது. நீட், புதிய கல்விக் கொள்கை என்று மாணவர்களின் எதிர் காலத்தையே பாழாக்கி வருகின்றது.

பாஜகவின் சூழ்ச்சி களை முறியடிக்கும் வகை யில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் குமரி மாவட்ட திராவிடர்கழ கம் சார்பாக துண்டறிக் கைகளை நாகர்கோவில் பகுதியில் பொதுமக்க ளுக்கு தோழர்கள் வழங்கி னர். மாவட்ட கழக செய லாளர் கோ.வெற்றிவேந் தன் தலைமையில் நடை பெற்ற இந்த பரப்புரை யில், மாவட்ட அமைப் பாளர் பிரான்சிஸ்,  மாவட்ட  துணைத் தலைவர் .நல்ல பெருமாள், பொதுக் குழு உறுப்பினர் மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட  செயலா ளர் பெரியார்தாஸ், இலக் கிய அணி செயலாளர் பொன்னுராசன்; மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், தொழிலா ளர் அணி செயலாளர் .. கருணாநிதி, மாவட்ட மகளிரணி தலைவர் இந் திரா மணி,மாவட்ட இளை ஞரணி செயலாளர் அலெக் சாண்டர், அமைப்பாளர் மு.இராஜசேகர்,  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலர் குமாரதாஸ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது, .செல்வராசு,பி.கென் னடி, சியாமளா, சி. அய் சக் நியூட்டன்,   பெரியார் பிஞ்சுகள் இரா. முகிலன், இரா.உதயா, பாலன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்  கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்


No comments:

Post a Comment