முஸ்லிம் அரசுகளின் எழுச்சி சி.பி.எஸ்.இ. நீக்கமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

முஸ்லிம் அரசுகளின் எழுச்சி சி.பி.எஸ்.இ. நீக்கமாம்!

புதுடில்லி, ஏப்.24   சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பானிப்பட் போர் உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. 

2022-2023 கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து அணிசேரா இயக்கம், பானிப்பட் போர் காலகட்டம், ஆசிய-ஆப்பிரிக்க பிராந்தியங்களில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, மொகலாய அரசவைகள் பற்றிய விவரங்களும், தொழிற்புரட்சி பற்றிய தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன. 

அதேபோல 10ஆம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் உணவு பாதுகாப்பு அத்தியாயத்தில் இருந்து விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. உருது கவிஞர் பைஸ் அகமது பைசின் 2 கவிதைகளின் மொழியாக்கம் செய்யப்பட்ட பகுதிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை குறித்த பகுதிகளும் இனி இருக்காது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) வட்டாரங்கள் தெரிவித்தன.

மேம்பட்ட நோய் கண்டறியும் பரிசோதனை மய்யம் தொடக்கம்

புதுச்சேரி, ஏப்.24 இந்தியாவின் முன்னணி நோய் கண்டறிதல் சேவை வழங்குநரான மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் புதுச்சேரியில் மேம்பட்ட நோயறியும் பரிசோதனை மய்யத்தை தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து இந்த ஆய்வக சேவைகளின் மூத்த தலைவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் வி.கவிதா கூறுகையில், “எந்தவொரு நோய்க்கும் மூல காரணமான கோவிட் அல்லது கோவிட் அல்லாதவற்றை முன்கூட்டியே கண்டறிவது, ஆரோக்கியமான தனி நபரை உறுதிசெய்வதற்கும், ஒட்டு மொத்தமாக ஆரோக்கியமான சமூகத்தை உறுதி செய்வதற்கும் முக்கியமாகும். மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நோயறிதலில் முன்னணியில் உள்ளதால், சரியான நேரத்தில் தரமான அறிக்கைகளை தருவதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்ய அதன் சோதனை மய்யங்களின் விரிவாக்கத்தில் மதிப்பை காண்கிறது. எங்களின் தற்போதைய நோயாளிகளின் சேவை கிளைகளில் இருந்து மீண்டும் ஒரு கிளை மூலம் புதுச்சேரியில் உள்ள குடிமக்களுக்கு உயர்தர நோயறிதல் சேவைகளை வழங்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார வாகன

தொழில்நுட்பங்கள் குறித்த பிரச்சாரம்

மதுரை, ஏப்.24 நமது நாட்டின் முக்கிய இலக்கான கார்பன் உமிழ்வைக் குறைப்பது மற்றும் பெட்ரோலியம் பொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பது போன்றவற்றின் அடிப்படையில் டொயோடா நிறுவனம் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளது,

டொயோடாவின் டிஜிட்டல் விளம்பர அணுகுமுறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள "ஹம் ஹை ஹைப்ரிட்" பிரச்சாரமானது 'செல்ப்-சார்ஜிங் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள்' பற்றிய விழிப்புணர்வை பலப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரம் குறித்து டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆலோசனை பிரிவு இணை துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், மின்சாரமயமாக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதற்கான எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவின் கார்பன் நடுநிலை இலக்கிற்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மின்மயமாக்கப்பட்ட வாகன தொழில்நுட்பங்களின் உலகளாவிய முன்னோடியாக இருக்கும் எங்களின் நோக்கம், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலின் ஒட்டுமொத்த சமூக நலன்களுக்கு பெருமளவில் பங்களிக்கும் இயக்கத் தீர்வுகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய ரயில்வேயுடன் இணைந்து சிமெண்ட் தளவாட சேவைகள்  

சென்னை, ஏப்.24  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான விகாட் குழுமம், கான்கார் நிறுவனத்துடன் இணைந்து அதன் தளவாடச் சேவைகளில் இப்போது தனிப்பயனாக்கப்பட்ட டேங்க் கொள்கலன்கள் மற்றும் லைனர்கள் கொண்ட பாக்ஸ் கன்டெய்னர்களில் ரயில் மூலம் சிமென்ட் போக்குவரத்துக்கான ஒரு புதுமையான மற்றும் முன் மாதிரி திட்டத்தை கொண்டு வருகிறது. பாரதி சிமென்ட் ஆந்திராவில் உள்ள தனது கடப்பா ஆலையில் இருந்து சென்னை, தென்மேற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவின் முக்கிய சந்தைகளுக்கு இந்த புதிய போக்குவரத்து மூலம் சேவை செய்ய திட்டமிட்டுள்ளது என பாரதி சிமெண்ட் இயக்குநர் எம்.ரவீந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பாரதி சிமென்ட் தனது கடப்பா ஆலையில் இருந்து கோயம்புத்தூருக்கு கான்கார் வழங்கும் 20 அடி டேங்க் கொள்கலன்கள் மூலம் மொத்த சிமெண்டை கொண்டு செல்லும். பாரதி சிமெண்ட், கேரளா மற்றும் தென்மேற்கு தமிழகத்தின் முக்கிய சந்தைகளுக்கு மொத்தமாக சிமெண்டை வழங்குவதற்காக கோயம்புத்தூரில் ஒரு பிரத்யேக பேக்கேஜிங் டெர்மினலை உருவாக்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கன்டெய்னர்களை வாங்குவதற்கும் கோயம்புத்தூரில் முழு தானியங்கி முனையத்தை அமைப்பதற்கும் பாரதி சிமெண்ட் நிறுவனம் மொத்தமாக ரூ.130 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக இந்திய விகாட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனூப் குமார் சக்சேனா தெரிவித்தார். பாரதி சிமென்ட் நிறுவனத்தின் தளவாடச் செலவு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளவை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என்று அவர் கருத்து தெரிவித்தார். 

No comments:

Post a Comment