'ராமநவமி' அன்று அசைவம் சாப்பிடக் கூடாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

'ராமநவமி' அன்று அசைவம் சாப்பிடக் கூடாதா?

ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பின் வன்முறை  
அசைவம் சாப்பிட்ட மாணவர்கள் பலர் காயம்

புதுடில்லி, ஏப்.11- டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ராமநவமி நாளில் இறைச்சி சாப்பிட்டவர்களை ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி தாக்கியது. இதில் 50 மாண வர்கள் காயமடைந்தனர்.

அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இஸ் லாமியர்கள் மீது தாக்குதல் அதிகரித் துள்ளது. அதுமட்டுமல்லாமல் இறைச்சி சாப்பிடுபவர்கள் மீதும் தாக்குதல் அதி கரித்துள்ளது. புதுடில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் ஹிந்துத்துவ மாண வர் அமைப்பினர்   ராமநவமி விழாவைக் கொண்டாடினர். அப்போது மாணவர் களுக்கான விடுதியில் இறைச்சி உணவைச் சாப்பிட்டு திரும்பிக் கொண்டு இருந்த மாணவர்களை ராமநவமி கொண்டாடிக் கொண்டு இருந்த ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் தாக்கினர்.  இந்த தாக்குதலில் 50 முதல் 60 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி ஜவகர் லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் அமைப்பின் மேனாள் தலைவர் மற்றும் பிஎச்.டி மாணவியான சரிகா என்பவர் கூறும்போது, எப்போ தும் போல் ஞாயிறு அன்று அசைவம் உணவு விடுதியில் சமைக்கப்படும். நாங்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வந்துகொண்டு இருந்தோம். அப்போது ஏபிவிபி அமைப்பினர் ராமநவமி அன்று அசைவ உணவு ஏன் சாப்பிட்டீர்கள் என்று கூறி எங்களைத் தாக்க ஆரம்பித் தனர்.  இதில் பலருக்கு காயம் ஏற்பட் டது. அவர்கள் விடுதிக்குள் புகுந்து கண்காணிப்பாளரையும் தாக்கினர். 

இதனைத் தொடர்ந்து, சம்பவப் பகுதிக்கு காவலர்கள் வரவழைக்கப்பட் டனர்.  காயமடைந்தவர்கள்   ஆம்புலன் சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப் பட்டு உள்ளனர்.  ஏபிவிபி அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.


No comments:

Post a Comment