மதுரை, ஏப் 11- தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ.360 கோடியில், 21,000 படுக்கைகள் வழங்கும் திட்டத்தை ஏப்.14ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏப்.10ஆம் தேதி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: " மதுரையில் பல்வேறு மருத்துவ மேம் பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட் டன. இன்னுயிர் காப்போம் மருத்துவத் திட்டத்தில் 3 மாதத்தில் 44 ஆயிரத் துக்கும் மேற்பட்டோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.55 லட்சத்தில் பொது மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவும், ரூ.70 லட்சத்தில் அறுவை சிகிச்சை பிரிவும் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 350 முதல் 400 பேர் தீ விபத் தால் பாதிக்கப்பட்டு இங்கு வருகின் றனர். தீக்காயப்பிரிவை மேம்படுத்த ரூ. 35 லட்சத்தில் புதிய சிகிச்சை மய்யம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமான மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது வரை 82 திருநங்கைகள், 122 திரு நம்பிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 4 பாலின மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மும்பை, தாய் லாந்துக்கு சென்று இச்சிகிச்சை பெறும் நிலையில், மதுரை அரசு மருத்துவ மனையில் இந்த சிகிச்சை கிடைக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள பிற அரசு மருத் துவமனையிலும் இந்த சிகிச்சை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.தென் தமிழ்நாட்டு மக்கள் சிசிக் சைக்காக அதிகம் வருவதால் இம் மருத்துவனைவயின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜப்பான் நிதியுதவியில் தரைத்தளம் உள்ளிட்ட 6 அடுக்கு புதிய மருத்துவ கட்டடங்கள் ரூ. 128 கோடியில் அமை கிறது. இதற்கான கட்டுமானப் பணி விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், ரூ. 139 கோடியில் உயர்தர மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும். டிசம்பர் இறுதிக்குள் 6 அடுக்கு கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனை வளாகத் தில் 7 புதிய கட்டடங்கள் ரூ. 69 கோடியில் கட்டப்படும். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அதிநவீன படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ரூ.360 கோடியில் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு 21,00 படுக் கைகள் வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஒரு மாதமாகவே கரோனா இறப்பு இல்லை என்பது மகிழ்ச்சி. தினமும் 20_-30 என தொற்று நிலை இருந்தாலும், தொடர்ந்து முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கரோனாவின் புதிய திரி பான எக்ஸ்இ இதுவரை கண்டறியப்பட வில்லை. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மருத்துவப் பணிக்கான பற்றாக்குறை உள்ள மருத்துவமனைக்கு பணியிடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப் பப்படும். புதிய காலிப்பணியிடங்கள் எம்ஆர்பி தேர்வு மூலம் நியமிக்கப்படும்.
போதை மாத்திரை, குட்கா, புகை யிலை உள்ளிட்ட போதைப்பொருள் களை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மருந்தகங்கள் கண்காணிக்கப்படும். கரோனா காலத்தில் பணியில் சேர்ந் தவர்களுக்கான பணிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிந்துள்ளது. கரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன் னுரிமை வழங்கி, மக்களை தேடி மருத் துவத் திட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள் ளனர். மேலும், 2 ஆயிரம் செவிலியர்களை மக்களைத் தேடி மருத்துவத்திற்கு தேர்ந்தெடுக்கும் திட்டம் உள்ளது. அப்போது, பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், தொடர்ச்சியான காலியிடங்களை நிரப்பும்போதும், முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment